காதலுக்காக சதி வேலை...ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் மல்கம் டர்ன்பல்லைக் கொல்ல திட்டமிட்டதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த மொஹமது காமர் நிஜாம்தீன் என்பவர் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

மல்கமை கொல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக, புத்தகத்தில் தீவிரவாதிகளின பட்டியலை எழுதி வைத்திருந்ததாக, கடந்த ஆகஸ்ட் மாதம் நிஜாம்தீன் கைது செய்யப்பட்டார். பின்னர், அந்த நோட்டில் இருந்த கையெழுத்தும், நிஜாம்தீனின் கையெழுத்தும் வேறு, வேறாக இருந்ததால் அவர் சில வாரங்கள் கழித்து விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து, வழக்குக்காக மொஹமது காமர் நிஜாம்தீன் செலவழித்த பணத்தை நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் வழங்கினர். இந்தநிலையில், மொஹமது காமர் நிஜாம்தீன் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரரான அர்சகன் கவாஜா தன்னுடைய கல்லூரியில் தனது காதலுக்கு போட்டியாக இருந்ததால் மொஹமது காமரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளார்.
சக மாணவனான இலங்கைச் சேர்ந்த இளைஞர் மொஹமது காமர் நிஜாம்தீனை, தீவிரவாதிகளுடன் தொடர்புப்படுத்தி போலீசில் சிக்க வைத்தது தெரிய வந்துள்ளது. அவரையே திட்டமிட்டு சதி வலையில் சிக்க வைத்த, அர்சகன் கவாஜாவை, சிட்னியில் போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தான் வம்சவழியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் உஸ்மான் கவாஜா, காயத்தில் இருந்து மீண்டு வந்து, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications