"ஐ லவ் யூ.. கல்யாணத்திற்கு ரெடியா.." ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எழுந்த குரல்! அடுத்த நொடி க்யூட்

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்தில் நடந்த க்யூட் பிரபோசல் வீடியோ இப்போது டிரெண்டாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத்திலே எம்பி ஒருவர் தனது காதலியிடம் திருமணம் செய்து கொள்ளக் கோரி பிரபோஸ் செய்தார். இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

வெளிநாடுகளில் காதலித்து வருவோர், தங்கள் பார்ட்னரிடம் தங்களைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்பார்கள். திருமணத்திற்காக அவர்கள் பிரபோஸ் செய்வதே பார்க்க அட்டகாசமாக இருக்கும்.

இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன. இதனிடையே இப்போது அதேபோன்ற ஒரு வீடியோ தான் டிரெண்டாகி வருகிறது.

 ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா


ஆனால், இதில் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த பிரபோசல் ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியா பாராளுமன்ற உறுப்பினர் நாதன் லம்பேர்ட் என்பவர் தான் தனது காதலியிடம் நாடாளுமன்றத்திலேயே பிரபோஸ் செய்துள்ளார். முதல்முறை எம்பியான நாதன் லம்பேர்ட், நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையிலேயே காதலியிடம் பிரபோஸ் செய்துள்ளார். அவர் பிரபோஸ் செய்தவுடன் நாடாளுமன்றமே அதிர்ந்தது. அனைத்து எம்பிக்களும் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர்.

 பிரபோசல்

பிரபோசல்

நாடாளுமன்றத்தில் பக்காவாக தயாராகி தனது முதல் உரையைப் பேசிக் கொண்டிருந்தார் நியூ விக்டோரியன் தொழிலாளர் கட்சி எம்.பி நாதன் லம்பேர்ட். அப்போது தனது உரையில் இறுதியில் நாதன் லம்பேர்ட் யாரும் எதிர்பார்க்காத வகையில், "நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று கூறி தனது காதலி நோவா எர்லிச்சிடம் அழகாக பிரபோஸ் செய்தார். மேலும் அவர், "நான் இங்கே மோதிரத்தை எடுத்து வரவில்லை.. ஏனென்றால் இங்கு (நாடாளுமன்றத்தில்) எந்தவொரு பொருளையும் எடுத்து வர அனுமதியில்லை.

 மோதிரம்

மோதிரம்

ஆனால் அதைப் பத்திரமாக வைத்துள்ளேன். இன்றிரவு மிகவும் ரொம்பான்டிக்காக மோதிரத்தைக் கொடுத்த பிரபோஸ் செய்ய இருந்தேன். நமது குழந்தைகள் தூங்குவதற்கும், நாம் தூங்குவதற்கும் இடையே இருக்கும் 10 நிமிடங்களில் மோதிரத்தைக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார். நாதன் லம்பேர்ட் இப்படி சொன்னவுடன் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய நாடாளுமன்றமும் அதிர்ந்தது. அவருக்கு அங்கிருந்த எம்பிக்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

 நாதன் லம்பேர்ட்

நாதன் லம்பேர்ட்

இந்தப் பேச்சுக்குப் பிறகு, லம்பேர்ட் தனது பாட்னருக்கு மோதிரம் ஒன்றைப் பரிசளித்தாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. தனது பார்ட்னர் தனது பிரபோசலை ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாகக் காதலித்து வரும் இந்த ஜோடிக்கு ஏற்கனவே குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கான பிரபோசல் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நாதன் லம்பேர்ட் விரும்பியுள்ளார். இருப்பினும், கொரோனா காலம், அரசியல் பிரசாரம் உள்ளிட்ட காரணங்களால் பிரபோஸ் செய்ய அவருக்குச் சரியான இடம் கிடைக்கவில்லை.

 டிரெண்டிங்

டிரெண்டிங்

இந்தச் சூழலில் தான் பிரபோஸ் செய்ய அவர் நாடாளுமன்றத்தைத் தேர்வு செய்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "விடுமுறைக்குச் செல்லும் போது பிரபோஸ் செய்ய திட்டமிட்டேன். ஆனால், விடுமுறைக்குச் செல்ல முடியவில்லை.. இதன் காரணமாகவே நாடாளுமன்றத்தில் பிரபோஸ் செய்ய முடிவு செய்தேன்" என்று அவர் தெரிவித்தார். நாதன் லம்பேர்ட் பிரஸ்டனின் வடக்கு மெல்போர்ன் தொகுதியில் இருந்து எம்பியாக இருக்கிறார். நாடாளுமன்றத்தில் வைத்து அவர் பிரபோஸ் செய்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய நாடாளுமன்றம்

அதேநேரம் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் இதுபோன்ற காதல் பிரபோசலை பார்ப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, கடந்த 2017இல் எம்.பி வில்சன் என்பவர் தன்பாலின திருமணம் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், கேலரியில் இருந்த தனது பார்ட்னர் ரியான் போல்கருக்கு பிரபோஸ் செய்தார். அப்போதே போல்கர் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். இவை அனைத்தும் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற குறிப்பேட்டிலும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+