கோவாக்சின் போடப்பட்ட பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீக்கம்.. அறிவித்தது ஆஸ்திரேலியா!
சிட்னி: கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
உலகம் முழுக்க கொரோனாவிற்கு பின் பயண கட்டுப்பாடுகள், விசா கட்டுப்பாடுகள் அதிகம் ஆகியுள்ளது. பல நாடுகள் வெளிநாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
முக்கியமாக வளரும் நாடுகளில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு வேக்சின்களுக்கு வளர்ந்த நாடுகள் அனுமதி அளிப்பது இல்லை. அதிலும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பயன்படுத்தப்படும் வேக்சின்களுக்கு பல்வேறு உலக நாடுகள் அனுமதி அளிக்க மறுத்து வருகிறது.

யுகே
சமீபத்தில்தான் இரண்டு டோஸ் கோவிஷீல்ட் வேக்சின் அல்லது யு.கேவால் அங்கீகரிக்கப்பட்ட வேக்சின் போட்ட இந்தியர்கள் இனி யு.கேவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது என்று யுனைட்டட் கிங்டம் தெரிவித்துள்ளது. பெரும் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் பின் யு.கே இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த நிலையில் கோவாக்சின் போட்டுகொண்ட பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கோவாக்சின்
இவர்கள் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முன் ஆஸ்திரேலியா செல்லும் மக்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று கட்டாய விதி இருந்தது. அதன்பின் ஒவ்வொரு வேக்சினுக்கும் தனி தனியாக தனிமைப்படுத்துதல் விதிகள் தளர்த்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது கோவக்சினுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
Recommended Video

2 டோஸ்
2 டோஸ் கோவாக்சின் போட்டவர்கள் இனி எளிதாக ஆஸ்திரேலியா செல்ல முடியும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பலர் கல்லூரி படிப்புகளில் படித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் எளிதாக இனி பயணம் மேற்கொள்ள முடியும். இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு இருக்கும் கோவாக்சின் வேக்சினுக்கு உலக சுகாதார மையம் இன்னும் அவசர அனுமதி வழங்கவில்லை.

அனுமதி எப்போது
இதுவரை 4 முறை சந்திப்பு கூட்டம் நடத்தியும் கோவாக்சினுக்கு அவசர அனுமதி கிடைக்கவில்லை. கோவாக்சின் குறித்து கூடுதல் விவரங்களை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார மையம் கேட்டு வருகிறது. வரும் நவம்பர் 3ம் தேதி கோவாக்சின் தொடர்பான கடைசி ரிவ்யூ மீட்டிங் நடக்கும். இதில் பெரும்பாலும் கோவாக்சினுக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications