Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் வினிராமனுக்கும் முன் கூட்டியே திருமணம்.. இன்ஸ்டாவில் லிப்லாக் போட்டோ!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் வினிராமனை மணந்தார். இவர்களது திருமணம் வரும் 27 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே இவர்களது திருமணம் நடைபெற்றது.

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல். அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தக்காரர், சிறப்பான ஸ்பின் பவுலரான இவர் கடந்த முறை ஐபிஎல்லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடினார்.

இதையடுத்து இந்த முறை ஐபிஎல் ஏல போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சரஸ் அணி இவரை ரூ 11 கோடிக்கு ஏலம் எடுத்து தக்க வைத்து கொண்டது.

கிளென் மேக்ஸ்வெல்

கிளென் மேக்ஸ்வெல்

இந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமனும் நீண்டகாலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்டதால் கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

 கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இதையடுத்து கொரோனா பரவல், ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவைகளால் இவர்களுடைய திருமணம் தள்ளி போனது. இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இருவருக்கும் மார்ச் 27ஆம் தேதி திருமணம் காலை 11.35 மணிக்கு மேல் 12.35 மணிக்குள்ளாக (ஆஸ்திரேலிய நேரப்படி) ரிஷப லக்கினத்தில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 மஞ்சள் நிற பத்திரிகை

மஞ்சள் நிற பத்திரிகை

இந்த திருமணத்திற்காக மஞ்சள் பத்திரிகை அடிக்கப்பட்டுள்ளது. அதில் சிரஞ்சீவி கிளென் மேக்ஸ்வெல் என போடப்பட்டுள்ளது. வினிராமன் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவில் பார்மஸி படித்து வந்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்து தற்போது கல்யாணம் வரை வந்துவிட்டது. இவர்களது மஞ்சள் நிற திருமண பத்திரிகை வைரலாகி வருகிறது.

மெல்போர்ன்

மெல்போர்ன்

இவர்களுக்கு மெல்போர்னில் திருமணம் நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. வினிராமனின் பெற்றோர் வெங்கட்ராம ராமானுஜ தாஸன், ஸ்ரீமதி விஜயலட்சுமி ராமன் என்றும் அது போல் மேக்ஸ்வெல்லின் பெற்றோர் நீல் மேக்ஸ்வெல்- ஜாய் என்றும் அந்த பத்திரிகையில் போடப்பட்டிருந்தது.

முன்கூட்டியே திருமணம்

முன்கூட்டியே திருமணம்

இந்த நிலையில் மேக்ஸ்வெல் வினிராமனை முன் கூட்டியே திருமணம் செய்து கொண்டார். அதாவது மார்ச் 27 ஆம் தேதி திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர்களது திருமணம் எளிய முறையில் நடந்து முடிந்தது. இரு வீட்டார், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

 இன்ஸ்டாவில் புகைப்படங்கள்

இன்ஸ்டாவில் புகைப்படங்கள்

இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வினிராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மிஸ்டர் அன்ட் மிசஸ் மேக்ஸ்வெல் என குறிப்பிட்டுள்ளார். இதை வைத்துதான் அவர்களுக்கு முன் கூட்டியே திருமணம் ஆன விவகாரம் வெளியே தெரிந்தது. திட்டமிட்ட நாளுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இவர்களது திருமணம் யாருக்கும் சொல்லாமல் நடந்தது ஏன் என தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+