Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆணுறைகள்.." கூடவே வந்த ஆபாச லெட்டர்கள்.. ஒரே நேரத்தில் 60+ பெண்களுக்கு துயரம்! பதறும் பெற்றோர்கள்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் இருக்கும் 60க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீரென ஆணுறைகளும் ஆபாசமான கடிதங்களும் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உலகம் பல வினோதமான மனிதர்களால் ஆனது என்பதை நாம் தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை.. இருப்பினும், சில நேரங்களில் சில மனிதர்கள் செய்யும் காரியங்களை பார்த்தால் ஒரு நிமிடம் நமக்குக் குழப்பமே வந்துவிடும்.

How Over 60 Women In Australia Received Used Condoms With Handwritten Message

எதற்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்பது நமக்குப் புரியவே புரியாது. அப்படியொரு வினோதமான, அருவருக்கத்தக்கச் சம்பவம் தான் இப்போது ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்டோருக்கு மட்டுமின்றி, இதைப் படிப்போருக்கும் எதற்கு இப்படியெல்லாம் என்றே தோன்றுகிறது.

என்ன நடந்தது: ஆஸ்திரேலியாவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு மெல்போர்னில் வசிக்கும் 65க்கும் மேற்பட்ட பெண்களின் வீடுகளுக்குக் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பயன்படுத்திய ஆணுறைகள் வந்துள்ளன. முதலில் இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், இது தொடர்ச்சியாக வரவே இது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளுடன் ஆபாசமான கடிதங்களும் அந்த பெண்களுக்கு வந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

சில வாரங்களுக்குப் பின்னரே, இப்படிப் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பல பெண்களுக்கு வருவது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இதற்குக் காரணமான நபரைத் தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

குறி: ஏதோ ரேண்டமான பெண்களுக்கு அவர் இதை அனுப்பவில்லை.. மாறாக சில குறிப்பிட்ட பெண்களை இலக்காக வைத்து இதை அனுப்பியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஏனென்றால், இப்போது வரை புகார் அளித்த அனைத்து பெண்களும் 1999ஆம் ஆண்டு அங்குள்ள தனியார் பெண்கள் பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலான பெண்களுக்குப் பல முறை இப்படிப் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளும் கடிதங்களும் வந்துள்ளது என்றும் அவர்கள் புகார் அளிக்கிறார்கள்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையைத் துவக்கியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பல முறை கடிதங்களைப் பெற்றுள்ளனர், அவை அனைத்தும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தை விசாரிக்கும் போலீசார் இது குறித்துக் கூறுகையில், "நாங்கள் ஆணுறைகளில் டிஎன்ஏ ஆய்வுகளைச் செய்து வருகிறோம். அதேபோல கையெழுத்தையும் ஆய்வு செய்கிறோம்.. 24 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். அங்கிருந்துதான் அவர்களின் முகவரிகளைப் பெறப்பட்டுள்ளன. இதில் சில கடிதங்கள் கையால் எழுதப்பட்டவை, சில டைப் செய்யப்பட்டவை.. இருப்பினும், அனைத்திலும் மிரட்டும் வகையிலான செய்திகளும்.. பாலுறவு குறித்த தகவல்களுமே இருக்கிறது.

எச்சரிக்கை: குற்றவாளிக்கு நாங்கள் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.. இதை உடனே நிறுத்துங்கள். விரைவில் நாங்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வோம்" என்றார்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "வீட்டிற்குக் கடிதம் வந்துள்ளதே.. என எதார்த்தமாகவே இதை நான் ஓபன் செய்தேன். உள்ள இருந்த விஷயத்தைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். எனது பெற்றோரும் ஷாக் ஆனார்கள். என்னை யாரோ குறிவைக்கிறார்களோ என்று அவர்கள் ரொம்பவே பயந்துவிட்டனர்.

நாங்கள் படித்த பள்ளிக்கும் இதற்கும் எப்படி தொடர்பு வந்தது என எங்களுக்குப் புரியவில்லை. இது முன்னாள் ஆசிரியர் அல்லது மாணவர் செய்த காரியமா எனத் தெரியவில்லை. அல்லது அட்ரஸ் புக்கை எங்கோ கண்டறிந்து இப்படிச் செய்துள்ளனரா என்றும் தெரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+