பெண்ணுடன் "நெருக்கம்.." அதுவும் மேடையிலேயே.. கடுப்பான கணவர்! கடைசியில் மேஜிக் கலைஞருக்கு நேர்ந்த கதி
ஆஸ்திரேலியாவில் மேஜிக் நிகழ்ச்சி தாக்குதல் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் மேஜிக் நிகழ்ச்சி ஒன்றில், பெண்ணிடம் மேடையில் கொஞ்சம் நெருங்கிய மேஜிக் கலைஞரை அவரது கணவர் மேடையேறித் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேஜிக் ஷோ என்றால் யாருக்குத் தான் பிடிக்காது.. மேஜிக் என்பது நம்மை ஏமாற்றுவது தான் என்றாலும் அதை எப்படி லாவகமாகச் செய்கிறார்கள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் ஒரு விஷயமாகவே இருக்கிறது.
மேஜிக் ஷோக்களை பார்வையாளர்களுடன் நெருக்கமானதாக மாற்ற... சில மேஜிக்களுக்கு பார்வையாளர்களையும் மேடைக்கு அழைப்பார்கள்... ஆனால், இங்கு அப்படி அழைத்த சம்பவமே விபரீதமாக மாறியுள்ளது.

மேஜிக் ஷோ
எப்போதும் பெண்களிடம் நெருக்கமாக இருக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். அதிலும் குறிப்பாகத் திருமணமான பெண்களிடம் நிச்சயம் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பார்கள். அப்படி திருமணமான பெண்களிடம் அத்துமீறினால் அது எப்படி ஆபத்தில் முடியும் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. மேஜிக் ஷோவில் பெண் பார்வையாளருடன் இணைந்து ஒரு மேஜிக் செய்கிறார்.. இதனால் ஆத்திரமடைந்த அவரது பாட்னர் அந்த மேஜிக் கலைஞரை நிகழ்ச்சியிலேயே தாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா
இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. பென் மர்பி என்ற மேஜிக் கலைஞர் கடந்த வாரம் ராயல் கரீபியன்ஸ் குவாண்டம் நிகழ்ச்சியில் மேஜிக் செய்த போது அவரை பார்வையாளர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த வாரம் நடந்த இந்த மேஜிக் ஷோ முதலில் நன்றாகவே தொடங்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மேஜிக் டிரிக்கிற்காக பார்வையாளராக இருந்த பெண்ணை மேடைக்கு அழைக்கிறார்.

தாக்குதல்
இருவரும் மேடையில் அருகே அமர்கிறார்கள். அப்போது ஒவ்வெருவரும் தங்கள் உதடுகளுக்கு இடையில் விளையாடும் சீட்டுகளை வைத்திருந்தனர். சில நொடிகளில் அவர்கள் உதட்டில் கார்டுகளை வைத்தவாறே முத்தம் கொடுப்பது போலச் செய்கிறார்கள். அப்போது இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் பாட்னர், திடீரென மேடை ஏறி, மேஜிக் கலைஞரைத் தாக்கத் தொடங்குகிறார். இதைப் பார்த்து ஷாக்கான அந்த பெண், தனது பாட்னரை சமாதானப்படுத்த முயல்கிறார். ஆனால், அதற்குள் அவர் தாக்கிவிடுகிறார்.

பரபர வீடியோ
இதனால் தாக்கப்பட்ட மேஜிக் கலைஞர் அப்படியே தரையில் படுத்துக் கிடக்கிறார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்கள் அதிர்ச்சியடைகிறார்கள். தாக்கிய பிறகு அந்த நபர் மேடையில் இருந்து கிளம்புகிறார்.. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மேஜிக் கலைஞரை அந்த நபர் மேடை ஏறித் தாக்கும் வீடியோ டிக்டாக்கில் மட்டும் 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவை மேஜிக் கலைஞரே தனது டிக்டாக் பாக்கத்தில், "மேஜிக் ஷோவின்போது என் மீதான தாக்குதல்" என்று கூறி வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மன்னிப்பு
மேலும், தாக்குதலுக்குப் பிறகு ஒரு வாரம் வரை தாக்கிய நபர் தன்னை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றும் மர்பி தெரிவித்துள்ளார். மேலும், "பொழுதுபோக்கு, காமெடி, மேஜிக் ஆகியவற்றை என்ஜாய் செய்ய வேண்டும். இப்படி நடந்து கொள்ளக் கூடாது. இனி சம்மந்தப்பட்ட அந்த நபரை எங்கும் அனுமதிக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொரு வீடியோவில் மர்பியைத் தாக்கிய பின், பார்வையாளர்கள் கத்தவே அந்த பெண்ணின் கணவர் மேடையிலிருந்து வெளியேறுவதும் அதில் பதிவாகியுள்ளது.

நெட்டிசன்கள்
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் நெட்டிசன்கள் பலரும் தாக்கிய நபரைக் கடுமையாக விமர்சித்தும், மேஜிக் கலைஞரை ஆதரித்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சம்மந்தப்பட்ட நபர் மீது போலீசாரிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல மற்றொருவர் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாடியுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications