"கால் ஏன் இப்படி நடுங்குது".. கடுப்பாக்கிய இந்திய வீரர்.. முகம் சுளித்த ரோஹித் சர்மா.. என்ன நடந்தது?
சிட்னி: ஆசிய கோப்பையில் மோசமாக சொதப்பிய கே. எல் ராகுல் தற்போது டி 20 உலகக் கோப்பை தொடரிலும் சொதப்பி வருகிறார். அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் இவர் மோசமாக ஆடி அவுட் ஆகி உள்ளார்.
2022 உலகக் கோப்பை டி 20 தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்தடுத்து இந்த தொடரில் பல அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மழை காரணமாக அயர்லாந்து வெற்றி பெற்றது. அதேபோல் மழை காரணமாக தென்னாப்பிரிக்கா மேட்ச் டிரா ஆனது.
இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி கடைசி பால் வரை சென்று திரில்லாக வென்றது.

வெற்றி
இந்த நிலையில் இன்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இன்று வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படாமல், அதே அணி களமிறக்கப்பட்டு உள்ளது. ரோஹித் சர்மா (சி), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (வி.கே), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று ஆடுகின்றனர்.

ராகுல்
இன்று கே. எல் ராகுல் தொடக்கத்தில் இருந்தே திணறியபடி ஆடினார். முக்கியமாக காலுக்கு வந்த பந்தை அடிக்க முடியாமல் கடுமையாக திணறினார். ஆசிய கோப்பையில் இருந்தே கே. ஏக் ராகுல் கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக பந்து ஸ்விங் ஆகி காலுக்கு வந்தால் அதை எப்படி அடிப்பது என்று தெரியாமல் ராகுல் கடுமையாக திணறுகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இப்படித்தான் ராகுல் அவுட் ஆனார் .

4 ரன்கள்
வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ராகுல் அவுட் ஆனார். இந்த நிலையில் இன்றும் நெதர்லாந்துக்கு எதிராக திணறியபடி ராகுல் அவுட் ஆனார். 12 பந்துகள் பிடித்த அவர் 100 ஸ்டிரைக் ரேட்டிற்கும் குறைவாக ஆடினார். வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். 1 பவுண்டரி அடித்தவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். அவர் அவுட்டான போது.. ரோஹித் சர்மா முகம் சுளித்தபடி பார்த்தார். இந்த எல்பிடபிள்யூவிற்கு ராகுல் ரிவ்யூ செய்யவில்லை. ஆனால் அது மிஸ்ஸிங் ஸ்டம்ப். அவுட் கிடயாது.

விக்கெட் இல்லை
விக்கெட் இல்லை என்றாலும் அவர் ரிவ்யூ எடுக்காத காரணத்தால் அவுட் ஆனார். இன்று போட்டியிலும் அவர் மோசமாக திணறியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ராகுல் இப்படி எல்லா போட்டியிலும் ஓப்பனிங் இறங்கிவிட்டு சில பந்துகளை ஆடிவிட்டு அவுட்டாகி சென்றுவிடுகிறார். முக்கியமாக எதோ பதற்றத்திலேயே இவர் பேட்டிங் செய்கிறார். காலில் பந்து பட்டுவிட்டுமோ என்ற பயத்திலேயே ஆடிக்கொண்டு இருக்கிறார்.

நெட்டிசன்கள்
ராகுல் இப்படி மோசமாக சொதப்புவதை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இவரை இனியும் ஓப்பனிங் இறக்க கூடாது. போதுமான அளவு வாய்ப்பு இவருக்கு கொடுக்கப்பட்டு விட்டது. அதனால் இனி பண்டை ஓப்பனிங் இறக்க வேண்டும். ராகுலை இனியும் நம்பி ஓப்பனிங் இறக்க கூடாது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications