பெண்களிடம் சில்மிஷம் செய்த விவகாரம்.. யோகா குரு ஆனந்த் கிரி ஆஸ்திரேலியாவில் அதிரடி கைது
Recommended Video
சிட்னி: உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த யோகா குருவான ஆனந்த் கிரி, ஆஸ்திரேலியாவில் சில்மிஷ வேலைகளில் ஈடுட்டதற்காக அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் ப்ரயாக்ராஜில் உள்ள கோயில் ஒன்றில், இளைய மடாதிபதியாக இருப்பவர் யோகா குரு ஆனந்த் கிரி. இவருக்கு வயது 38 ஆகிறது. மேலும் இவர் யோகா படிப்பில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஆன்மிக படிப்பு ஒன்றை பயிலவும் ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் ஆனந்த் கிரி தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னும் இவர் அந்நாட்டிற்கு சென்ற போது, இரு வேறு சம்பவங்களில் பெண்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
அதன் விவரம் பின்வருமாறு, கடந்த 2016-ம் ஆண்டில் ரூட்டி ஹில் என்னுமிடத்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவரிடம், ஆனந்த் கிரி அநாகரிகமாகவும், தவறாகவும் நடந்து கொண்டுள்ளார்.
பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 34 வயது பெண் ஒருவரிடமும் ஆனந்த் கிரி பாலியல் ரீதியாக தவறாக நடந்துள்ளார். இந்த இருவேறு சம்பவங்களிலும் ஆனந்த் கிரி மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.
6 வார ஆன்மீக சுற்றுலாவாக தற்போது ஆஸ்திரேலியா சென்ற ஆனந்த் கிரியை. அந்நாட்டு போலீஸார் மேற்கண்ட புகார்களின் கீழ் கைது செய்துள்ளனர். விரைவில் அவர் இந்தியா திரும்ப இருந்த நிலையில், பாலியல் புகார்களின் கீழ் சுற்றி வளைத்து அந்நாட்டு காவல்துறை ஆனந்த் கிரியை கைது செய்துள்ளது.
ஸ்வாமி ஆனந்த் கிரியின் குரு மஹந்த் நரேந்திர கிரி இந்த கைது சம்பவத்தை உறுதிபடுத்தினார். கைது செய்யப்பட்டுள்ள ஆனந்த் கிரி தனது முகநூல் பக்கத்தில், எப்படியாவது எந்த வகையிலாவது மற்றவர்களுக்கு சேவை செய்வதே எனது லட்சியம். உலகம் சிறப்பாக மாற அது வழிவகுக்கும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications