ஆஸ்திரேலியாவை உலுக்கிய "முட்டைகோஸ்".. இது எமர்ஜென்சி மேட்டர்! ஏன் பிரதமரே இப்படி சொல்றாரு! என்னாச்சு
சிட்னி: ஏன்டா காக்கா இம்புட்டு காண்டி ஆய் போனதுக்கு இம்புட்டு அக்கப்போரா என்று வடிவேல் காமெடி ஒன்றில் வரும்.. அப்படித்தான் ஆஸ்திரேலியாவில் முட்டைகோஸ் விவகாரம் அந்நாட்டு பிரதமர் வரை சென்று இருக்கிறது. அப்படி என்ன நடந்தது?
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கேஎப்சி உணவக கிளைகள் உள்ளன. இந்த உணவகங்களில் நாடுகளுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்படும்.
அதாவது இந்தியாவில் கேஎப்சி பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டது போல.. நாடுகளுக்கு ஏற்றபடி சில உணவு முறைகளில் மாற்றம் செய்யப்படும்.

கேஎப்சி
அந்த வகையில்தான் சமீபத்தில் கேஎப்சி பர்கரில் ஆஸ்திரேலியாவில் lettuce நீக்கப்பட்டது. lettuce என்பதை தமிழில் மலைக்கீரை என்று கூறுவார்கள். இது பார்க்க அப்படியே முட்டைகோஸ் போல இருக்கும். ஆனால் முட்டைகோஸுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. பங்காளிகள் கூட கிடையாது! lettuce ஒரு கீரை வகையை சேர்ந்தது ஆகும். முட்டைகோஸை விட அதிக சுவை கொண்டது. ஆனால் சத்துக்கள் குறைவானது.

லேட்டிஸ்
சரி இந்த லேட்டிஸ்தான் பொதுவாக பர்கரில் இடையில் வைக்கப்படும். பன்களுக்கு இடையில் சிக்கன் அருகே லேட்டிஸ் வைக்கப்படும். இதுதான் பர்கர் சுவையை கூட்டும். ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவில் கடுமையான லேட்டிஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு லேட்டிஸ் விலை 300 மடங்கு உயர்ந்து உள்ளது. சர்வதேச பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இதிலும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

லேட்டிஸ் தட்டுப்பாடு
2 டாலர் இருந்த லேட்டிஸ் 8 டாலர் ஆகியுள்ளது. இதையடுத்து விலை ஏற்றம் காரணமாக லேட்டிஸ் பயன்பாட்டை குறைக்க போகிறோம் என்று கேஎப்சி ஆஸ்திரேலியாவில் அறிவித்துள்ளது. இதுதான் மேட்டர். இதற்கு பதிலாக லேட்டிஸ் போலவே இருக்கும் முட்டைகோஸை பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில்தான் கேஎப்சியின் இந்த முடிவை மற்ற பர்கர் நிறுவனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முட்டை கோஸ்
இது ஆஸ்திரேலியாவில் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் பலர் இந்த முடிவை எதிர்த்து உள்ளனர். ஏன்டா காக்கா இம்புட்டு காண்டி ஆய் போனதுக்கு இம்புட்டு அக்கப்போரா என்று வடிவேல் காமெடியில் வருவது போல மக்கள் இந்த முடிவிற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். ஏன் அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் கூட இதை பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்கிறது, நமது உணவு முறைகளும் இதனால் பாதிக்கப்படுகிறது. முட்டைகோஸை பர்கரில் வைப்பது சின்ன விஷயமாக தோன்றலாம்.. ஆனால் இது கடும் விலைவாசி உயர்விற்கான சின்ன டீசர் என்று பலர் விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்த விலைவாசி உயர்வு அந்நாட்டு பிரதமர் ஆண்டனி அல்பானிஷ் வரை சென்றுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்.. முட்டைகோஸ் விவகாரம் ஒரு தேசிய பிரச்சனை ஆகிவிட்டது என்றார்.

பிரதமர் கிண்டல்
மேலும் இது எமர்ஜென்சி மேட்டர். லேட்டிஸ் மற்றும் முட்டை கோஸ் இரண்டும் ஒன்றல்ல. இது முழுக்க முழுக்க தவறான முடிவு என்று கூறி உள்ளார் அந்நாட்டு பிரதமர். அதோடு, இதை பற்றி விசாரிக்க ஒரு குழு அமைக்க போகிறேன். இதை இனி Cabbage-gate என்று சொல்லலாம். கமிட்டி அமைத்து விசாரிப்பேன் . நாடாளுமன்றத்திலும் இதை பற்றி கூறுவேன் என்று கிண்டலாக ஆஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications