இது எப்படி இருக்கு? புத்தாண்டில் ரஜினியாக மாறி டேவிட் வார்னர் கொடுத்த சர்ப்ரைஸ்.. செம்ம வீடியோ!
சிட்னி: ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னார் தர்பார் படத்தில் ரஜினி ஆடும் சும்மா கிழி பாடலுக்கு தான் நடனமாடுவது போல் மாற்றப்பபட்ட பேஸ்ஆப் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிகழ்காலத்தில் இந்தியர்களை மிகவும் கவர்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வரும் டேவிட் வார்னர்தான்.
கில்கிறிஸ்ட், மேத்யூ ஹேடனுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவின்ன சூப்பரான ஓப்பனிங் பேட்ஸ்மேன் இவர். இவருக்கும் இந்தியாவிற்கும் புதிய சம்பந்தத்தை உருவாக்கியது ஹைதராபாத் அணி.

வார்னர் ஆர்வம்
ஐபிஎல் போட்டிகளில் கலக்கலாக ஆடத் தொடங்கியவருக்கு கிரிக்கெட்டை தாண்டி இந்திய திரைப்படங்கள் மீது ஆர்வம், இந்திய நடிகர்களின் பாடல்களுக்கு ஆட்டம் என்று செம்ம சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார் வார்னர்.

டிக்டாக் வீடியோ
தெலுங்கின் பயங்கர ஹிட்டான, புட்டபொம்மா பாட்டுக்கு இவர் போட்ட குத்தாட்டம் வேர்ல்ட் ஃபேமஸ் . இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் சினிமா பாட்டுக்கு அவர் ஆடும் வீடியோவை கேட்டு கோரிக்கை வைக்க தொடங்கினர்.. ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது டிக்டாக் வீடியோ போட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

பாகுபலி
இந்நிலையில் தமிழ்நாட்டின் தேனியைச் சேர்ந்த டிக்டாக் அருணன் போல், நெற்றி நிறைய விபூதி பட்டை, கழுத்தில் தாயத்து என சூப்பர் கெட்அப்பில் வார்னர் தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் கடந்த டிசம்பர் மாதம் ஷேர் செய்திருந்தார். அதன்பிறகு சிட்டி ரோபாவாக மாறி இருந்தார். அதன்பிறகு பாகுபலியாக, அமீர்கானாக இப்படி பல வேடங்களுக்கு மாறி பதிவிட்டார்.
ரஜினி
இப்போது டேவிட் வார்னார் தர்பார் படத்தில் ரஜினி ஆடும் சும்மா கிழி பாடலுக்கு தான் நடனமாடுவது போல் மாற்றப்பபட்ட பேஸ்ஆப் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏராளமான ரசிகர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த வீடியோவை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறினார். இதை பார்த்து தமிழக ரசிகர்கள் பலர் நன்றி தெரிவித்துள்ளார்கள். பாலிவுட் ரசிகர்களும் தங்கள் நடிகர்களின் படங்களையும் இதேபோல் வெளியிடுமாறு கோரி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications