சிட்னி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாலி.. 12.01 மணிக்கு மதுபார்கள்.. சலூன்கள்.. 106 நாளுக்கு பிறகு தளர்வு, குஷியில் ஆட்டம்போடும் சிட்னி

106 நாட்களுக்கு பிறகு சிட்னியில் நீக்கப்பட்ட தளர்வுகள்

Google Oneindia Tamil News

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சுமார் 106 நாட்களுக்கு பிறகு நடைமுறையில் இருந்த பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.. இதையடுத்து, இந்த நாளை, சுதந்திர தினம் என்று கூறி அம்மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாட துவங்கி உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக கருதப்படுவது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சிட்னி... கடந்த வருடம் மார்ச் மாதமே இங்கு கொரோனா வைரஸ் மிரட்ட தொடங்கியது.. ஒருநாளைக்கு 200-க்கும் கொரோனா கேஸ்கள் பதிவாகின..

பிறகு மெல்ல மெல்ல அதிகரித்து உச்சம் தொட்டது.. அதற்கு பிறகு அம்மாகாணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படவும் ஓரளவு குறைந்தது.. ஆனால் 2வது அலை பரவல் முதல் அலையை விட மோசமாக பாதித்தது..

 நிலக்கரி பற்றாக்குறை- மின்வெட்டு அபாயம் வருமா? கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள்! நிலக்கரி பற்றாக்குறை- மின்வெட்டு அபாயம் வருமா? கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள்!

லாக்டவுன்

லாக்டவுன்

கடந்த ஜுன் மாதத்தின் 2வது வாரத்தில் அதிகரிக்க தொடங்கியது... அதாவது தினமும் 3 இலக்க எண்ணிக்கையில் தொற்று பாதிப்புகள் பதிவாகின.. அதற்கு பிறகுதான் கடுமையான லாக்டவுன் போடப்பட்டது. கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு முழு அடைப்பு உத்தரவிடப்பட்டு, தொற்றை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.. ஆனால், அதற்குள் டெல்டா வைரஸின் பரவல் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அதிகமாகி விட்டது.

 ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

இதற்கு பிறகு தொடர்ந்து 4 மாதத்துக்கு சிட்னியில் லாக்டவுன் போடப்பட்டது.. அந்த மக்களும் ஆபத்தை உணர்ந்து அரசுக்கு ஒத்துழைப்பு தந்தனர்.. இதன்விளைவாக அங்கு தொற்று கட்டுக்குள் வந்துள்ளன.. கிட்டத்தட்ட 106 நாட்களுக்கு பிறகு முழு லாக்டன் வாபஸ் பெறப்பட்டுள்ளது.. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த பொதுமுடக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது..

தடுப்பூசி

தடுப்பூசி

கடந்த ஜுன் மாதம் தொடங்கி அங்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.. காரணம், சிட்னியில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெரியோர்கள் முழு தடுப்பூசி போட்டதை கருத்திற்கொண்டு இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன... எனவே, இத்தனை நாளும் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே கடைகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அத்தியாவசியமற்ற சேவைகளும் திறக்கப்பட்டுவிட்டன.. இந்த தினத்தை அந்த மக்கள் நெகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்..

 சுதந்திர தினம்

சுதந்திர தினம்

நள்ளிரவு 12.01 மணிக்கு, பொதுமக்கள் பார்கள், மற்றும் பொதுவிடங்களில் கூடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 12.01-க்கெல்லாம் பார்கள் திறந்ததுதான் இதில் ஹைலைட்டான விஷயம்.. 4 மாத காலமாக முடி வெட்டாமல் இருந்தவர்கள் ஹேர்கட்டுக்காக பார்பர் ஷாப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.. ஆரோக்கியம் பேண முடியாமல் இருந்தவர்கள் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். தங்களது கஸ்டமர்களை கடைக்காரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்..

பேட்டி

பேட்டி

இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் டோமினிக் பெர்ரோட்டெட் சிட்னி நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இன்றைய நாளை சிட்னியின் சுதந்திர நாளாக நான் காண்கிறேன், தொற்றைக் கடந்து நாடு இந்த செல்கிறது என்றாலும், இது மிக முக்கிய சவாலாகவே தொடர்ந்து உள்ளது.. பொருளாதார காரணங்களுக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தொற்று அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

 எண்ணிக்கை

எண்ணிக்கை

இருந்தாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் டிசம்பர் 1ம் தேதி வரை வீட்டிலேயே இருப்பது சிறப்பு.. அதற்குள் அக்டோபர் மாதம் பிற்பகுதியில் 80 சதவீதம் தடுப்பூசியை போட்டுவிடலாம்.. அந்த இலக்கும் நிறைவேறிவிட்டால், மேலும் கட்டுப்பாடுகள் அகலும்" என்றார். நேற்றைய நிலவரப்படி அந்த மாகாணத்தில் 61.9 சதவிகிதம் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது..

தளர்வுகள்

தளர்வுகள்

82.2 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 496 புது கொரோனா கேஸ்களும், 8 மரணங்களும் பதிவாகி உள்ளன.. இதற்காகவே பழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்னதாகவே பார்களும், சூப்பர் மார்க்கெட்டுகளும் திறக்கப்பட்டன.. ஆனால், ஹோட்டல்கள், பார்கள், சூப்பர் மார்கெட்டுகள், ஜிம்கள், சலூன்கள் என எந்த இடமாக இருந்தாலும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

English summary
Sydney ends Covid lockdown after 106 days and Public celebrates as Freedom day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X