யப்பா.. தினேஷ் கார்த்திக்.. என்ன இது? அப்படியே ஸ்டன் ஆகி நின்ற மைதானம்.. குழம்பிய ரசிகர்கள்!
சிட்னி: இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டியில் இன்று சுவாரசியமான சில சம்பவங்கள் நடைபெற்றன.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான டி 20 உலகக் கோப்பை போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
இன்று ஆடும் இந்திய அணியில், கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் ஆகியோர் கண்டிப்பாக ஆடுவார்கள். இதனால் இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக கே. எல் ராகுல், கோலி, ரோஹித், சூர்யா குமார் யாதவ் , தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஷமி, அஸ்வின், அக்சர், அர்ஷிதீப் சிங் மற்றும் புவனேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதையடுத்து முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

தினேஷ் கார்த்திக்
இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கீப்பிங் மிக சிறப்பாக இருந்தது. மூன்றாவது ஓவரிலேயே ரிஸ்வான் அடித்த பந்து ஒன்றை மிக சிறப்பாக அவர் தடுத்தார். அதேபோல் மற்ற நேரங்களிலும் தினேஷ் கார்த்திக் சிறப்பாக கீப்பிங் செய்தார். ஆனால் இன்று அவர் விக்கெட் கேட்காமல் அமைதியாகவே இருந்தது பலரையும் குழப்பியது. அதன்படி ஹர்திக் பாண்டியா 15.5வது ஓவரில் நவாஸ் அவுட் ஆனார்.

ஹர்திக்
ஹர்திக் போட்ட ஷார்ட் பந்தில் அவர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் என்று கேட்கவே இல்லை. அதோடு அவர் மிகவும் அமைதியாக இருந்தார். பந்து பேட்ஸ்மேன் கிளவுஸில் பட்டு சென்றதால் பெரிதாக சத்தமும் கேட்கவில்லை. இதனால் உண்மையிலேயே விக்கெட் போனதா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள்.

விக்கெட்
விக்கெட் என்று நவாஸ் வெளியே சென்ற பின்புதான் அவர் அவுட் ஆனதே தெரிந்தது. இந்த விக்கெட்டிற்கு தினேஷ் பெரிதாக கொண்டாடவும் இல்லை. அடுத்த ஓவரிலேயே அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் ஆசிப் அலி அவுட் ஆனார். அப்போதும் அவர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் என்று கேட்கவே இல்லை. அதோடு அவர் மிகவும் அமைதியாக இருந்தார்.

கத்துங்க பாஸ்
மீண்டும் அவர் விக்கெட்டை கொண்டாடாமல் அமைதியாக இருந்தார். இதனால் உண்மையிலேயே விக்கெட் போனதா என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்கள். ஆனால் நடுவர்கள் விக்கெட் கொடுத்தனர். தினேஷ் கார்த்திக் இப்படி விக்கெட் கேட்காமல், கூலாக இருப்பது ரசிகர்களை குழப்பி உள்ளது. தினேஷ் கார்த்திக் இனிமேல் விக்கெட் விழுந்தால் கத்த வேண்டும். அவர் கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐபிஎல் முடிந்தது.. அடுத்த வேலையை பாருங்க.. உதய் கோட்டக் ட்வீட் கொடுத்த ஷாக் -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
30%க்கு மேல் வரி.. 13 வயதில் வைபவ் சூர்யவன்ஷி கட்டும் வரி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்துது போங்க -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications