ஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோ
சிட்னி: ஆஸ்திரேலியா வனவிலங்கு பூங்காவில் ஒரு பெண் பாம்புக்காக இரு ஆண் பாம்புகள் சண்டையிட்டு கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
பெண்ணுக்காக இரு ஆண்கள் அடித்து கொள்வதை பார்த்துள்ளோம். அது போல் மிருகங்களும் பெண் இணையுடன் சேர ஆக்ரோஷமாக சண்டையிட்டுக்கொள்வதை பார்த்துள்ளோம்.
இந்த சண்டை காட்சிகளை என்ஜிசி, அனிமல் பிளேனட் உள்ளிட்ட சேனல்களில் பார்த்துள்ளோம். உணர்ச்சி என்பது மனிதர்களுக்கு மட்டும்தானா என்ன?

காதல்
விலங்குகளுக்கும் ஈர்ப்பு, அன்பு, காதல், உணர்ச்சி ஆகியவை இருக்கின்றன. அதிலும் யானைகள் தந்தம் இருக்கும் யானைகளை மட்டுமே தன்னுடன் இணையாக சேர விரும்பும். தந்தம் உடைந்திருந்தாலோ, தந்தமே இல்லாமல் பிறந்திருந்தாலோ அந்த ஆண் யானையுடன் பெண் யானைகள் இணை சேருவதில்லை.

இணைக்காக
இது ஒரு விதமான லவ் என சொல்லலாம். பாம்புகளும் தங்கள் இணைக்காக சண்டையிட்டுக்கொள்வதை கேட்டிருக்கிறீர்களா, இரு பாம்புகள் ஒன்றிணைவதைத்துதான் நாம் அவ்வப்போது பார்த்துள்ளோம். ஆனால் ஆஸ்திரேலியா வனவிலங்கு பூங்காவில் இரு ஆண் பாம்புகள் ஒரு பெண் பாம்பிற்காக சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள் வைரலாகியுள்ளன.

விஷப்பாம்புகள்
இரு முல்கா எனும் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து தங்களில் யார் சிறந்தவன் என்பதை காண்பிக்கின்றன. பெண் பாம்புடன் யார் இணைவது என்பதற்கான போட்டி இதுவாகும். இந்த சண்டை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. பொதுவாக இந்த காலம் பாம்புகள் இணையும் காலமாம்.

வீடியோ
அதிலும் முல்கா ஆண் பாம்புகள் இந்த காலத்தில் யார் பலசாலி என்பதை பெண் பாம்புகளுக்கு உணர்த்த சக ஆண் பாம்புடன் சண்டையிட்டு அதில் வெற்றி பெறும் பாம்பே பெண்ணுடன் இணையும். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications