"பேய்" வீடுகள்.. இதென்ன ஆஸ்திரேலியாவுக்கு வந்த புது சோதனை.. கையை பிசையும் அதிகாரிகள்! என்ன மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நாடு முழுக்க இருக்கும் "பேய்" வீடுகள் இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதைச் சமாளிக்க ஆஸ்திரேலியா அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் உலகின் பல நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. அதில் ஆஸ்திரேலியாவும் விதிவிலக்கு இல்லை. அங்கே வீட்டு வாடகை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது.

 What is Australia plan to counter rental hike due to surge in Ghost Homes

அங்கே நாடு முழுக்க பூட்டி இருக்கும் வீடுகளே இதற்குக் காரணம். பொதுவாக இதுபோல கட்டி முடித்தும் பூட்டப்பட்டுள்ள வீடுகளை Ghost Homes, அதாவது பேய் வீடுகள் என்று அழைப்பார்கள்.

பேய் வீடுகள்: அதற்காக இதில் பேய் இருக்கிறது என்றெல்லாம் அர்த்தம் இல்லை. பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே இருப்பதால் இப்படி குறிப்பிடுவார்கள். இதனால் வீடுகளின் வாடகை அங்கே கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் இப்போது ஆளும் கட்சியாக இருக்கும் தொழிற்கட்சி இதற்கு ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. அதாவது வீடுகளை வாங்கி அதை காலியாக வைத்துள்ள வெளிநாட்டினரிடம் இருந்து குறிப்பிடத்தக்கக் கட்டணத்தை வசூலிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதாவது வெளிநாடுகளில் இருக்கும் பணக்காரர்கள்.. ஆஸ்திரேலியாவில் வீடுகளை வாங்கிவிட்டு அதை வருடத்திற்கு சில நாட்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மற்ற நாட்களில் அந்த வீடுகள் பூட்டப்பட்டே இருக்கிறது. முக்கிய பகுதிகளில் பல வீடுகள் இப்படிப் பூட்டப்பட்டே இருக்கும் நிலையில், வாடகை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. அதைச் சமாளிக்கவே இந்தக் கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.

வயசு வெறும் 19 தான்! காலேஜ் படிக்கும்போதே ரூ.29,000 கோடிக்கு அதிபதி! உலகை வியக்க வைத்த டெல் வெச்சியோ


என்ன தீர்வு: இதற்கான மசோதாவை அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் கூடும்போது அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் வீடுகள் இருப்பு குறைவாக இருப்பதால் அங்கே தேசிய அளவில் வாடகை விகிதம் 7.6 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கே வாடகை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகையில், "ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பல வீடுகள் காலியாக இருக்கிறது. அதேநேரம் மறுபுறம் வீடு தேவைப்படும் பலருக்கு வீடுகள் கிடைப்பதில்லை. இதனால் வாடகை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே நாங்கள் இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேநேரம் நாங்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தோர் வீடுகளை வாங்கவே கூடாது எனச் சொல்லவில்லை.

அவர்கள் புதிதாகக் கட்டப்படும் வீடுகளைத் தாராளமாக வாங்கட்டும். ஆனால், ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகள் என்பது இப்போது ஆஸ்திரேலியாவில் உள்ளவர்களுக்கே அதிகம் தேவைப்படுகிறது" என்றார்.

எவ்வளவு அதிகரிப்பு: வெளிநாட்டினர் வேலை அல்லது படிப்புக்காக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள் என்றால் அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது அந்த வீடுகளை விற்க வேண்டும் என்ற விதிமுறை ஏற்கனவே இருக்கிறது. மேலும், வெளிநாட்டினர் வீடுகளை வாங்க வேண்டும் என்றால் வெளிநாட்டு முதலீட்டுக் கட்டணமாக $18,500 அமெரிக்க டாலரையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதற்கிடையே புதிய விதிமுறைகள்படி இந்தக் கட்டணத்தையும் ஆஸ்திரேலியா இப்போது மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், ஆறு மாதங்களுக்கும் மேலாக வீடுகள் காலியாக இருந்தால் அதற்காக வருடாந்திர காலியிட கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று இப்போது ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அது வெளிநாட்டு முதலீட்டுக் கட்டணத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

பலன் தருமா: அதாவது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, காலியாக இருக்கும் வீடுகளுக்குச் செலுத்தப்படும் கட்டணம் என்பது தற்போதைய கட்டணத்தை விட 6 மடங்கு அதிகமாக இருக்கும். பேய் வீடுகள் பிரச்சினையை தீர்ப்பதன் மூலம் வாடகை அதிகரிப்பதைத் தடுக்க முடியும் என்று நம்பியே ஆஸ்திரேலிய அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+