"300 பேருடன் உடலுறவு.." அடுத்து அந்த இளம்பெண் சொன்ன மேட்டர்.. "வேலை போச்சு!" என கதறல்! என்னாச்சு
சிட்னி: ஒரே ஆண்டில் சுமார் 300 ஆண்களுடன் உடலுறவு கொண்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர், இதே காரணத்திற்காகத் தனது கார்ப்பரேட் வேலையை இழந்துள்ளார்.
இப்போது எங்குத் திரும்பினாலும் இணையம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இணையப் பயன்பாடு முழு வீச்சில் அதிகரித்தே வருகிறது. இந்த இணையத்தை வைத்து பலரும் சைட் பிஸ்னஸாக சம்பாதித்தும் வருகிறார்கள்.

குறிப்பாக வெளிநாடுகளில் பலரும் ஆபாசப் படங்களில் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலமும் வருமானம் ஈட்டுகிறார்கள். இதற்கிடையே அங்கு வசிக்கும் பெண் ஒருவர் இதே காரணத்திற்காக வேலையை இழந்துள்ளார். அது குறித்து நாம் பார்க்கலாம்.
300 பேருடன் உடலுறவு: ஆஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக மிகவும் ஆக்டிவாக இருக்கும் பெண் என்று அழைக்கப்படும் ஆபாசப் பட நடிகை அன்னி நைட்தான் வேலையிழந்துள்ளார். காப்ரேட் வேலை ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த அவர், திடீரென வேலையைவிட்டு நீக்கப்பட்டுள்ளார். இந்த 26 வயதான அன்னி நைட் தான், சமீபத்தில் ஒரே ஆண்டில் 300க்கும் மேற்பட்ட நபர்களுடன் உடலுறவு கொண்டதாகக் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
அங்குள்ள பிரபல டிவி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அன்னி நைட் தான் வேலையிழந்ததற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். இவர் அந்த குறிப்பிட்ட ஆபாச இணையதளத்தில் டாப் 0.4 சதவீதத்தில் இருக்கிறாராம். தனது இந்த ஆபாசப் பட வாழ்க்கையால் நிச்சயம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கடங்கள் வரும் என்று அறிந்து இருந்தாலும் கூட இதற்காக வேலை போகும் என்று ஒரு நாளும் நினைக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
வேலை போச்சு: இது தொடர்பாக அன்னி நைட் கூறுகையில், "முதலில் இந்த கணக்கைத் தொடங்கிய போது எனக்கு சில கவலை இருந்தது.. ஆன்லைனில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னைத் தினசரி வாழ்வில் சந்திப்போர் கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கவே செய்தது. இதன் காரணமாகவே ஆபாசப் படங்களில் நடிப்பதை எனது வேலை உட்பட அன்றாட வாழ்க்கையில் இருந்து முடிந்தவரை விலக்கி வைத்திருந்தேன். ஆனாலும், அதே காரணத்தால் இப்போது நான் வேலையிழந்துள்ளேன்.
சமீபத்தில் புதிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அங்கே பணிக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அப்போது ஒருநாள் உடல்நலக்குறைவால் சீக்கிரமாக வீடு திரும்பினேன். வீட்டுக்கு வரும் முன்பே எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதில் எனது ஆபாச தள கணக்கு குறித்தும் ஸ்கிரீன் ஷாட்களை இணைத்திருந்தார்கள். இதன் காரணமாக என்னை வேலையை விட்டு நீக்குவதாக மெயிலில் கூறியிருந்தனர்.
விதிமீறல்கள்: மொத்தம் மூன்று விதிமீறல்களில் நான் ஈடுபட்டதாகக் கூறியிருந்தனர். முதலில் நான் எந்தவொரு சைட் பிஸ்னஸிலும் ஈடுபடவில்லை என்று பொய் கூறியதாகக் குறிப்பிட்டனர். அடுத்து புதிய தொழில் செய்ய முறையான அனுமதி பெறவில்லை எனக் குறிப்பிட்டார்கள். அடுத்து எனது ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த மூன்று காரணங்களால் என்னை வேலையை விட்டு நீக்குவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில் அந்த வேலை மீது எனக்குப் பெரியளவில் ஈடுபாடே இல்லை. அந்த நிறுவனத்தின் பாலிசிக்களே கடுப்பாகத்தான் இருந்தது. ஆனாலும், திடீரென என்னை வேலையைவிட்டு நீக்கியது கஷ்டமாகத் தான் இருந்தது" என்று அவர் கூறினார்.
கடந்த செப். 2020இல் ஆபாச இணையத்தில் கணக்கைத் தொடங்கிய அன்னி நைட் புதிதாக வீட்டை வாங்கச் சேமித்துக் கொண்டு இருந்தாராம். மார்க்கெட்டிங் பிரிவில் மேலாளராக பணியாற்றிய அவர், இப்போது ஆபாச தளம் காரணமாக வேலையை இழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications