வார்னிங்.. இவரை முதலில் தூக்குங்க! வார்ம் அப்பில் வெட்ட வெளிச்சமான பிரச்சனை! இந்திய அணிக்கு சிக்கல்
சிட்னி: உலகக் கோப்பை டி 20 தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி இன்று வார்ம் அப் மேட்சில் ஆடி வருகிறது. இந்திய அணி மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா இடையே இந்த போட்டி நடந்து வருகிறது.
உலகக் கோப்பை டி 20 தொடருக்கு முன்பாக நடக்கும் இந்த மேட்ச் மிகவும் முக்கியமானது ஆகும். காரணம், ஆஸ்திரேலிய பிட்சில் இந்தியா எப்படி ஆடுகிறது என்பது இதன் மூலமே தெரியும்.
சமீப காலமாக இந்திய பிட்சிலும், சவுதி பிட்சிலும் ஆடி வந்த இந்திய அணி நீண்ட காலத்திற்கு பின் ஆஸ்திரேலிய பிட்சில் ஆட உள்ளது.
அதுவும் நீண்ட காலத்திற்கு பின் ஆஸ்திரேலிய பிட்சில் டி 20 தொடரை இந்திய அணி ஆட உள்ளது. இதனால் இன்றைய வார்ம் அப் மேட்ச் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய பிட்சில் பொதுவாக கோலி சிறப்பாக ஆடுவார். ஆனால் ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய பிட்சுகளில் அவ்வளவு சிறப்பாக ஆடியது கிடையாது. இந்த நிலையில்தான் இன்று நடக்கும் வார்ம் அப் மேட்சில் கோலி இடம்பெறவில்லை. இன்று நடக்கும் போட்டியில் ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இந்திய அணி
இந்திய அணி மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா இடையே இந்த போட்டி நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே திணறி வருகிறது. ஓப்பனிங் இறங்கிய ரோஹித் சர்மா வெறும் 3 ரன்களுக்கு அவுட் ஆனார். ஜேசன் பெஹன்டிராப் ஓவரில் அவுட் ஆனார். இன்னொரு பக்கம் பொறுமையாக ஆடிக்கொண்டு இருந்த பண்ட் 17 பந்துகள் மட்டுமே பிடித்த நிலையில் அவுட் ஆனார். சரியாக பார்மில் இல்லாத அவர் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தீபக் ஹூடா
அதன்பின் இறங்கிய தீபக் ஹூடாவும் பெரிதாக ஆடவில்லை. 22 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஜேசன் பெஹன்டிராப் ஓவரில் அவுட் ஆனார். இந்த மூன்று வீரர்களும் இந்திய அணியில் பார்மில் இல்லை. முக்கியமாக பண்ட் டி 20 போட்டிகளில் சுத்தமாக பார்மில் இல்லை. இதனால் அவரை அணியில் எடுக்க கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தினேஷ் கார்த்திக்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

ஆசிய கோப்பை
ஆசிய கோப்பை தொடரில் பண்ட் சரியாக ஆடவில்லை. அதன்பின் நடந்த ஆஸ்திரேலிய தொடரிலும் வாய்ப்பு கிடைத்த சமயங்களில் அவர் சரியாக ஆடவில்லை. இந்த நிலையில்தான் இன்றும் அவர் ஓப்பனிங் இறங்கி சொதப்பி உள்ளார். இதனால் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடத்தில் பண்டை இறக்க கூடாது என்று இந்திய ரசிகர்கள் பிசிசிஐக்கு வார்னிங் கொடுத்து வருகின்றனர். அதேபோல் தீபக் ஹூடாவையும் களமிறக்க கூடாது என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த வார்ம் அப் மேட்சில் இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனை வெட்டவெளிச்சமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications