For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எண்ணிலடங்கா சாதனைகள்.. விளையாட்டுத் துறையில் தமிழகம் புதிய மைல்கல்.. அசத்தும் அதிமுக அரசு!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கீழ் விளையாட்டு துறையில் தமிழகம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் கீழ் விளையாட்டு துறையில் தமிழகம் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அதிமுக அரசு விளையாட்டிற்கும் இளைஞர் நலனுக்கும் சிறந்த முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு பல புதுமைத் திட்டங்களை அரசு துவக்கியுள்ளது. கடந்த 8 வருடங்களாக விளையாட்டு துறையில் தமிழகம் சீராக வளர்ந்து வருகிறது. உலகத்தரமான போட்டிகளில் தமிழகம் கோப்பைகளை, பதக்கங்களை வென்று வருகிறது.

இதற்கு தமிழக அதிமுக அரசின் திட்டங்களும், நீதி ஒதுக்கீடும்தாம் காரணம். அனைத்து தரப்பு இளைஞர்களிடையே நல்ல குடிமகனாக விளங்குவதற்கான தகுதிகள், சமுதாய பனிக்காக தங்களை அர்ப்பணித்தல் போன்ற பண்புகளை வளர்ப்பதே, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் குறிக்கோளாகும். அதை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது.

Tamilnadu CM Palanisamys government number of achievements in Sports field

இத்துறையின் நிதி ஒதுக்கீடானது சீராக அதிகரித்து வருகிறது. 2018-19 நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு ரூ.124.52 கோடியும், தேசிய மாணவர் படைக்கு ரூ.49.83 கோடியும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரூ.14.71 கோடியும் முதல்வர் பழனிசாமி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை ஊக்கப்படுத்தவும் தீவிர மற்றும் நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வட்டார அளவில் திரள் பங்கேற்புக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் சிறு விளையாட்டரங்கம் மற்றும் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் கொண்ட மையங்கள், கிராம / வட்டார அளவில் முதல்வர் பழனிசாமி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிராம மக்களில் திரளானவர்களை விளையாட்டில் ஈடுபடச் செய்வதை ஊக்குவிக்கும் வண்ணம் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொள்ளும் கிராம விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவில் விளையாட்டில் இளைஞர்கள் முதன்மை நிலையை அடைவதை உறுதி செய்வதற்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை ஆகியவைகளால் பல்வேறு வயது பிரிவினரிடையே பல்வேறு மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட மிகச் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களை முதல்வர் பழனிசாமி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

Tamilnadu CM Palanisamys government number of achievements in Sports field

திருப்பூர் மற்றும் வேலூர் நீங்கலாக ஏனைய மாவட்டத் தலைநகரங்களில் 400 மீ. தடகள ஓடுபாதை மற்றும் கால்பந்து மைதானம் கொண்ட மாவட்ட விளையாட்டு வளாகங்கள் முதல்வர் பழனிசாமி அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 27 மாவட்டங்களில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்நோக்கு உள்விளையாட்டரங்கங்கள், ஆடுகளம் மற்றும் அதன் தொடர்புடைய வசதிகள் அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழக விளையாட்டு வீரர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் உயர் நிலையை அடையச் செய்ய, மாநில அளவில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் முதல்வர் பழனிசாமி அரசு உறுதி பூண்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள வெவ்வேறு மாவட்டங்களில் பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்பு வசதிகள் அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, மாநிலத்திலுள்ள விளையாட்டு வீரர்கள் பயனடையும் வகையில மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசு சீரிய முயற்சிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் உயர்நிலையை அடையச் செய்யும். தீவிர பயிற்சி, விளையாட்டு கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கான நிதியுதவி அளித்தல் மூலம் தமிழக விளையாட்டு வீரர்கள் பலர் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் மிகச் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர்

Tamilnadu CM Palanisamys government number of achievements in Sports field

ஊக்க தொகை மற்றும் உதவித் தொகைகள்:

பல்வேறு நிலைகளில், பல்வேறு பிரிவுகளில், தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அதிமுக அரசானது உதவித் தொகைகள், விருதுகள் மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறது. தமிழக விளையாட்டு வீரர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை அதிமுக அரசால் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழக வீரர் மாநில அரசிடமிருந்து ரூ.2. கோடி உயரிய ஊக்கத் தொகையாக அளிக்கப்படுகிறது. மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் அவர்களின் திறனை மேலும் மேம்படுத்தி பல்வேறு பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்ல ஏதுவாக ஒரு ஆண்டுக்கு / ஒரு விளையாட்டு வீரருக்கு ரூ.25. லட்சம் அளவிற்குத் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 முதல் 15 வரை ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21வது காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்றுநர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ.4.83 கோடி வழங்கப்பட்டது.

இளம் வீரர்களுக்கு உதவித் தொகைத் திட்டம்:

இளம் வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக நபர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.500/-வழங்கப்படுகிறது. இவ்வாறு, ஒவ்வொரு வருடமும் 3240 இளம் வீரர்களுக்கு வருடம் ஒன்றிற்கு தலா ரூ.6,000/- அளிக்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டிற்கு ரூ.194.40 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu CM Palanisamys government number of achievements in Sports field

அதேபோல் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு விளையாட்டு அகாடமிகளை முதல்வர் பழனிசாமி அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்த அகாடமிகளில்,உலக திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படும் உடற்திறன் தகுதி தேர்வுகளில் 10-க்கு 10, 9 மற்றும் 8 மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் மட்டும் வல்லுநர்கள் குழுவால் நடத்தப்படும் தேர்வுப் போட்டிகள் மூலம் அவர்களது திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் பன்னாட்டு வீரர்கள் மூலம் சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் அறிவியல் பூர்வமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அகாடமிகளில் பயிற்சி முகாம் நடத்துவதற்கு முதல்வர் பழனிசாமி அரசு ரூ.80. இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இறகுப்பந்து அகாடமி:

இறகுப்பந்து அகாடமி திருச்சி, கடலூர், தருமபுரி, மதுரை மற்றும் சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ரூ.70. இலட்சம் முதல்வர் பழனிசாமி அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வல்லுநர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 16 வயதிற்குட்பட்ட, பயிற்சி பெறும் 15 திறன் வாய்ந்த பயிற்சி பெறுபவர்களுக்கு 25 நாட்களுக்கு அறிவியல் ரீதியான பயிற்சியுடன் சிற்றுண்டியும் பயணப்படியும் வழங்கப்படுகின்றன. இறகுப்பந்து விளையாட்டில் சிறந்து விளங்க பயிற்சி பெறுபவர்களின் செயல்திறன் வல்லுநர் குழுவால் கண்காணிக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன

விளையாட்டு விடுதிகள்:

2011-2012 ஆம் ஆண்டுவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில், 13 விளையாட்டு விடுதிகள், 860 மாணவர்களைக் கொண்டு மட்டுமே செயல்பட்டு வந்தன. அவ்விளையாட்டு விடுதிகள் மதுரை, திருநெல்வேலி, சென்னை (4), கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, ஈரோடு (2) மற்றும் கடலூர் (என்.எல்.சி) ஆகிய இடங்களில் அமைந்திருந்தன. இந்த விடுதிகள் முதல்வர் பழனிச்சாமி ஆட்சியின் கீழ் புனரமைக்கப்ட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இந்த விடுதிகளில் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு ரூ.250/- வீதம் உணவுப்படி அரசு அளித்துள்ளது. மேலும், ஊட்டச் சத்து நிபுணர்களின் அறிவுரைகளின்படி, விடுதியில் உள்ள மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு மாணவருக்கும் விளையாட்டுச் சீருடைகளுக்காக ரூ.1,800/-, விளையாட்டு உபகரணங்களுக்காக ரூ.400/- மற்றும் சேவைக் கட்டணமாக ரூ.300/- வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகள் உள்ள கல்லூரிகளில் இணை விளையாட்டு மேம்பாட்டு மையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில, தென்மண்டல / அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கிடையேயான போட்டிகள், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அரசு சார்பாக ரூ.6,000/வழங்கப்படுகிறது.

Tamilnadu CM Palanisamys government number of achievements in Sports field

உடற்கூறுத் தகுதிகள், காயத் தடுப்பு முறை மற்றும் மேலாண்மை, ஊட்டசத்து உணவு வழிமுறைகள், நுணுக்கங்கள், தந்திரோபாயங்கள் மற்றும் விளையாட்டு உளவியல் ஆகியவற்றை முன்னிறுத்தி வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் பளுதூக்கும் சிறப்பு விளையாட்டு மேம்பாட்டு மையம் 1997ல் நிறுவப்பட்டது. இம்மையத்தில், 30 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் பயிற்சி பெற இயலும். இம்மையத்தை சிறப்பாக நடத்துவதற்கு ரூ.7.89 இலட்சம் முதல்வர் பழனிசாமி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தால் பல சர்வதேச பளுதூக்கும் வீரர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மற்றும் 2018 ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவரும், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் நமது தேசத்தின் சார்பாக கலந்து கொண்டவருமான திரு.எஸ். சதீஷ்குமார் அவர்கள் இம்மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார். பளுதூக்குதலுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய புதிய கட்டிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிசாமி அவர்களால் 13.03.2018 அன்று திறக்கப்பட்டது.

அதேபோல் வளைகோல்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டிற்காக முறையே தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில் சிறப்பு மேம்பாட்டு மையங்கள் தலா 30 மாணவர்களைக் கொண்டு நிறுவப்பட்டன. ஒவ்வொரு மையத்திற்கும் ஆண்டொன்றுக்கு தலா ரூ.1.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அனைத்து நீச்சல் குளங்களிலும் நீச்சல்கற்றுக்கொள்' திட்டம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கி பரிசு பெரும் வெற்றியாளர்களை ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் அளவில் ஊட்டச் சத்து உணவு, விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்த வெற்றியாளர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கும், பயிற்சி பெறுவதற்கும் விமானக் கட்டணம் பெற தகுதி உடையவர்கள் ஆவர். இதற்கான செலவினம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சுழல் நிதியின் மூலம் பெறப்படும் வட்டியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.

2017-18 ஆம் ஆண்டில் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் பழனிசாமி அரசால் ரூ.28,18,654/நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் 25 சிறிய விளையாட்டு அரங்கங்களில் கோடை விடுமுறை நாட்களில் 16 வயதிற்குட்பட்ட மாணவ / மாணவியர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து மற்றும் பிற விளையாட்டுகளில் தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வல்லுநர்களால் கோடைகால பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் 6436 விளையாட்டு வீரர்கள் கோடைகால பயிற்சி முகாம் மூலம் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்காக, முதல்வர் பழனிசாமி அரசு ஒவ்வொரு வருடமும் ரூ.2.05 இலட்சம் ஒதுக்கீடு செய்கிறது.

உலகத் திறனாளர்கள் கண்டறியும் திட்டத்தின் மூலம் கண்டறியப்பட்ட 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் திறன் வாய்ந்த சிறுவர், சிறுமியர்களுக்காக 67 கல்வி மாவட்டங்களில் இருப்பிடமில்லா பயிற்சி முகாம் 5 நாட்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துக்கொள்ளும் சிறுவர், சிறுமியருக்கு தகுதி வாய்ந்த பயிற்றுநர் மற்றும் விளையாட்டு வல்லுநர்கள் மூலம் விளையாட்டு அடிப்படை நுணுக்கங்கள் கற்றுத்தரப்படுகிறது. 2017 ஆம் வருடம் நடத்தப்பட்ட கல்வி மாவட்ட அளவிலான பயிற்சி முகாமில் 9327 மாணவ மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும், இத்திட்டத்தைச் செயல்படுத்த அதிமுக அரசு ரூ.5.44 இலட்சம் ஒதுக்கீடு செய்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் திறன் வாய்ந்த சிறுவர் | சிறுமியர்கள் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 15 நாட்கள் மாவட்ட அளவிலான இருப்பிட பயிற்சி முகாமில் பயிற்சி வழங்கப்படுகிறது.

தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு வல்லுநர்களைக் கொண்டு அடிப்படை விளையாட்டுத் திறன்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த சிறுவர் சிறுமியர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அகாடமிகள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஊக்குவிக்கப்படுவர். இத்திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டில் 3919 விளையாட்டு வீரர்கள் பயனடைந்துள்ளனர். உணவுப்படி, விளையாட்டுச் சீருடை மற்றும் தங்குமிட வசதிகளுக்காக அதிமுக அரசு ரூ.71.04 இலட்சத்தை ஒதுக்கீடு செய்கிறது.

வார இறுதி பயிற்சி முகாம் மற்றும் தினசரி பயிற்சி திட்டத்தினை ஒருங்கிணைத்து கடந்த 2016ல் திறன்கண்டறியும் முகாம் திட்டம் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமியர்களுக்கு அந்தந்த பகுதிகளில் பிரபலமாக இருக்கும் விளையாட்டுகளில் முறையான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அனைத்து 32 மாவட்டங்களிலும் 6 மாத காலத்திற்கு நடத்தப்பட்டு வருகிறது.

2017 ஆம் ஆண்டில் 620 விளையாட்டு வீரர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளனர். போக்குவரத்துப்படி, ஊட்டச்சத்து உணவுப்படி, விளையாட்டு சீருடை, விளையாட்டு உபகரணங்கள் செலவினத்திற்காக ரூ.81.20 இலட்சம் இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வர் பழனிசாமி அரசால் அளிக்கப்பட்டுள்ளது.

புத்தாக்கப் பயிற்சி முகாம் மழலையர் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் பொறுப்பு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ளது. விளையாட்டு குறித்த சிறந்த அறிவினை அடையவும், விளையாட்டு செயல்பாடுகளின் சிறந்த தொடர்பு மற்றும் விளக்கத்தின் தேவையை பூர்த்தி செய்யவும், சமீபத்திய விதிமுறைகளை குறித்து அறிந்திருக்கவும், 40 வயதிற்குட்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் ரூ.14.50 இலட்சம் இத்திட்டத்திற்கு அதிமுக அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு புத்தாக்கப் பயிற்சி நிறைவேற்றப்பட்டது.

அசோசியேஷன் ஆப் டென்னிஸ் புரபோசனல்ஸ் (ஏ.டி.பி.) சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் 50,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொண்ட "சென்னை ஓப்பன் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி"என்ற பெயரில் தமிழ்நாடு டென்னிஸ் கழகத்தால் நடத்தப்பட்டது. இது ஏ.டி.பி. உலகத்தர வரிசை போட்டியான சர்வதேச ஏ.டி.பி. சுற்றின் ஒரு அங்கமாகும். இந்த போட்டிகள் முதல் முறையாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் 2018 பிப்ரவரி மாதம் 10 முதல் 18 வரை நடத்தப்பட்டது. இந்தப் போட்டியினை சென்னையில் நடத்துவதற்கு தமிழ்நாடு அதிமுக அரசு தனது பங்களிப்பாக ரூ.40.00 இலட்சம் வழங்கியது.

இந்தப் போட்டிகள் உலக அளவில் தர வரிசையில் 70 முதல் 200 வரை உள்ள வீரர்களையும் இந்தியாவில் உள்ள தலை சிறந்த முன்னிலை வீரர்களையும் கவர்ந்துள்ளது. இந்த போட்டிகள் வளரும் இளம் திறனாளர்களுக்கு முன்ணனி வீரர்களின் விளையாட்டுத் திறனை நேரடியாக காண்பதற்கும் நுட்பமாக விளையாடும் திறனை அறிந்து கொள்ளுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அதிமுக அரசு மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளை நடத்தி வருகிறது. 2017-18 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும், பரிசுத் தொகை வழங்கவும் ஆண்டுதோறும் ரூ.819. இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

மாநில விளையாட்டுக் கழகங்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்துவதற்கும், தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு அணிகள் பங்கேற்க செய்வதற்கும் அதிமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.3 கோடி ஒதுக்கீடு செய்கிறது. 2017-18 ஆம் ஆண்டு முதல் மாநில விளையாட்டு கழகங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தொகையினை ரூ.3 இலட்சத்திலிருந்து ரூ.10 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் போட்டிகள், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் இளைஞர்களிடையே அடிப்படை பண்புகளை வளர்த்து, அவர்களை பொறுப்புமிக்க குடிமகன்களாக மலரச் செய்கின்றன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள இளைஞர்களின் திறமைகளை கண்டறிய முயற்சித்து, அதன் மூலம் அவர்களின் திறமையை மேம்படுத்த சந்தர்ப்பம் அளிப்பதற்கும், போட்டியில் சிறந்து விளங்கும் நாட்டத்தினை மேம்படுத்துவதற்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயலாற்றி வருகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X