சென்னையில் களைகட்டிய யோகா தினம்.. 1000 போலீசார் பங்கேற்ற பிரமாண்ட நிகழ்ச்சி
சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் நேற்று போலீசார் பங்கேற்ற பிரமாண்ட யோகா பயிற்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான யோகா நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

தமிழகத்திலும் யோகா தின கொண்டாட்டங்கள் களை கட்டின. கல்லூரிகள், பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அந்தவகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், போலீசார் பங்கேற்ற யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், 1000 போலீசார் கலந்துகொண்டு, பலவித ஆசனங்களை செய்தனர்.

இந்த யோகா பயிற்சிக்கு, பிரம்ம குமாரிகள் சபையினர் ஒருங்கிணைப்பு செய்தனர். சென்னை மாநகர உளவுத்துறை போலீஸ் கமிஷனர் திருநாவுக்கரசு, ரிசர்வ் போலீஸ் பிரிவு கமிஷனர் சவுந்தரராஜன் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications