1.5 கோடி வியூவ்ஸ்.. விஜய் தோற்றத்திற்காக 10 லட்சம் செலவழித்த யூடியூபர்! யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: நடிகர் விஜய்போன்ற தோற்றத்தில் யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு கலவையான விமர்சனங்களைப் பெற்றதன் மூலம் டிரெண்டிங்கில் வந்துள்ளார் தென்காசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். இவர் யார்? என்ன செய்துவருகிறார்.

இந்த யூடியூப் வந்த பிறகு தமிழ்நாட்டில் பிரபலங்களுக்குப் பஞ்சமே இல்லாமல் போய்விட்டது. ஜிபி முத்து போல் உட்கார்ந்துகொண்டு காமெடியாக கடிதங்கள் படித்தால்கூட பல லட்சம் பேர் அதைப் பார்த்து ரசிக்கிறார்கள். கோமாளித்தனமாக ஏதாவது தமாஸ் செய்தால் கூட அதை விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள். அந்த வரிசையில் தன்னை விஜய் போல் நினைத்துக் கொண்டு வீடியோ போட்டு வருகிறார் ஒரு யூடியூப் பிரபலம்.

vijay tamil nadu

இவர் போட்ட ஒரு ரீல்ஸ் சமூக ஊடகத்தில் 1.5கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இவர் யார்? எந்த ஊர்? என்ன செய்கிறார்? உண்மையில் இவர் தன்னை விஜய் என்றே நம்புகிறாரா? இது பற்றி பல விளக்கங்களை அளித்திருக்கிறார். இவர் பெயர் ரமேஷ். அதாவது ஆர்விடி ரமேஷ் என்ற பெயரில்தான் தன் இன்ஸ்டா, யூடியூப் கணக்குகளை வைத்துள்ளார்.

ரமேஷ் தன் சொந்த வாழ்க்கை பற்றி பேசுகையில், “நான் விஜய் மாதிரி இருக்கிறேன் என்று எப்போதும் நினைத்ததே இல்லை. சொன்னதும் இல்லை. முதலில் காதல் தோல்வியால்தான் நான் இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆரம்பித்தேன். என்னை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டுப் போன பெண் என்னைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பதற்காக செய்த முயற்சிதான் அது. இப்போது அந்தப் பெண் என்னை இன்ஸ்டாகிராம் வழியாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். வேண்டாம் என நிராகரித்த ஒருவன் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறானே என அவர் நிச்சயம் நினைத்திருப்பார்.

கடந்த 2016இல் நான் யூடியூப் தொடங்கியது இப்போது 2024 வரை நடத்திக் கொண்டுதான் இருக்கிறேன். எவ்வளவோ வீடியோக்கள் போட்டுவிட்டேன். ஆனால், 2022க்குப் பிறகுதான் என் வீடியோ டிரெண்டிங் ஆக ஆரம்பித்தது. முதல் கட்டமாகக் கடந்த 3 மாதங்கள் முன்பாக தான் யூடியூப் முதல் வருமானம் கிடைத்தது. சுமார் 1.50 லட்சம் பேர் என் சேனலை பின் தொடர்கிறார்கள்.

கேரளாவில் ஒரு டெக்ஸ்டைலில் வேலை பார்த்துக் கொண்டேதான் வீடியோ போட்டு வருகிறேன். ஆனால் எனக்குச் சொந்த ஊர் தென்காசி. நான் விஜய் போல் இருக்கிறேன் என்று எப்போதும் சொன்னதே இல்லை. நினைத்ததும் இல்லை. முன்பு என் முகத்தோற்றம் வேறு மாதிரி இருந்தது. பிறகு பல் வரிசையைச் சிகிச்சை மூலம் சரி செய்தேன். அதன்பின் விஜய் போல் இருப்பதாகப் பலர் சொன்னார்கள். அந்த ரூட் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. உடனே விஜய் மாதிரி பேசி வீடியோ போட தொடங்கினேன். அது மிகப்பெரிய ரீச் ஆனது. சொல்லப் போனால் விஜய் மாதிரி செய்த வீடியோதான் என்னை இப்போதுவரை காப்பாற்றி வருகிறது" என்கிறார்.

இவரைப் பலர் விஜய் போல் இருப்பதாகப் பாராட்டி கருத்துகள் போட்டாலும் விஜய் மீது வெறித்தனமாக அன்பு வைத்து இருக்கும் ரசிகர்கள் பலர் ரமேஷை உருவக்கேலி செய்து கமெண்ட்ஸ் போடவும் செய்கிறார்கள். ஆனால், பாராட்டை ஏற்றுக்கொள்வதைப் போல விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்வேன். யாரையும் நோகடிக்கும்படி பதிலளிக்க மாட்டேன் என்கிறார் இவர். சிலர் இவரது செல்போன் நம்பரை வாங்கி வீடியோ கால் செய்து திட்டவும் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்.

இவர் விஜய் ஸ்டைலில் முத்தம் தரும் ரீல்ஸ் மட்டும் 1.5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. தொடக்கத்தில் இவர் விஜய் மாதிரியான தோற்றத்தைப் பின்பற்றி முடிவெட்டுவது, உடை அலங்காரம் செய்து கொள்வது பல் சிகிச்சை எடுத்துக் கொண்டது என இதுவரை 10 லட்சம் வரை செலவு செய்துள்ளேன் என்று ஒரு யுடியூப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தோற்றத்தில் விஜய்போல் இருப்பதால் பட புரமோஷன்களுக்கு விஜய் மாநாடு எனப் பல நிகழ்ச்சிகளுக்கு இவருக்கு அழைப்பு வந்துள்ளது. கேரளாவில் வேலை செய்து வருவதால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்றும் சொல்கிறார். இவரது வீடியோவின் கீழ் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் உன் முகம் விஜய் மாதிரியே இல்லையே? என்று சிலர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதைத்தாண்டி பலர் பொங்கி எழுந்தும் உள்ளனர். அதை எல்லாம் படிப்பேன். ஆனால், மண்டைக்குள் ஏற்ற மாட்டேன் என்கிறார் ரமேஷ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+