ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தல்- நண்பரின் மர்ம உறுப்பை வெட்டி கொன்ற கொத்தனார் கைது!
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்திய நபரை அவருடன் இருந்த நபரே மர்ம உறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஜம்மு மாவட்டம் தக்கல் அருகே உள்ள ராஜகர்னா காடு பகுதியை சேர்ந்தவர் குஜார் பண்டிட். இவரது மகன் நாராயன் பண்டிட் (வயது 36). இவரது நண்பர் அதே ஜம்மு மாவட்டம் தக்கல் அருகே உள்ள கரும்புத்து கிராமத்தை சேர்ந்த ஜெனார்த்தன பண்டிட் மகன் குபேந்திரன் பண்டிட் (36).
இவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் மேட்டுத் தெரு பகுதியில் அறை எடுத்து தங்கி கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொத்தனார் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் நாராயன் பண்டிட்டும், குபேந்திரன் பண்டிட்டும் தங்கி இருந்த அறையில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் சென்று பார்த்த போது நாராயன் பண்டிட் மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகில் படுத்திருந்த குபேந்திர பண்டிட்டும் கழுத்தில் லேசான காயங்களுடன் கிடந்தார். உடனே அங்கு கூடியிருந்தவர்கள் அவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயற்சி செய்தனர்.ஆனால் போகும் வழியிலேயே நாராயன் பண்டிட் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அந்த பகுதியினர் குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குன்னம் போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. சோனல் சந்திரா, தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் நாராயன் பண்டிட் உடலை போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து, கழுத்தில் காயங்களுடன் கிடந்த குபேந்திர பண்டிட்டிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் 2 பேர் நள்ளிரவில் புகுந்து நாராயன் பண்டிட்டின் மர்ம உறுப்பை அறுத்து கொலை செய்ததாக குபேந்திரன் பண்டிட் கூறினார்.
குபேந்திரா பண்டிட் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது நள்ளிரவில் நாராயன் பண்டிட் ஓரின சேர்க்கைக்கு அழைத்து தினமும் வற்புறுத்துவாராம். நேற்றும் நள்ளிரவில் வழக்கம் போல ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த குபேந்திர பண்டிட், நாராயன் பண்டிட்டின் 'மர்ம' உறுப்பை கத்தியால் அறுத்துள்ளார். மேலும் ஆத்திரம் தீராத அவர் கத்தியால் தலையில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் நாராயன் பண்டிட் இறந்து போனதும் இதை மறைக்க 2 மர்ம நபர்கள் நள்ளிரவில் தங்கள் அறைக்கு வந்து நாராயன் பண்டிட்டை கொலை செய்து விட்டு தன்னையும் கழுத்தில் கத்தியால் அறுத்து விட்டு தப்பியதாக கூறி அவர் நாடகமாடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குபேந்திர பண்டிட்டை கைது செய்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications