நாகர்கோவில் அருகே கார் விபத்து: பிரதமர் மோடியின் உறவுக்கார பெண் பலி
கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே நிகழ்ந்த கார் விபத்தில், பிரதமரின் உறவுக்காரப் பெண் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம், ஜினார்க் கார்டு மாவட்ட பஞ்சாயத்து தலைவி டிவிபென் வறீயா (49). இவர் பிரதமர் நரேந்திர மோடியின் உறவினரானாவார். ஆன்மிக சுற்றுலாவிற்காக தனது குடும்பத்தினருடன் தமிழகத்துக்கு கார் மூலம் இவர் வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரிக்கு காரில் வந்தனர்.

பணகுடி - காவல் கிணறு சாலையில் உள்ள புண்ணிய வாளன்புரம் அருகே வந்தபோது, நிலை தடுமாறி கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் டிவிபென் வறீயா, அவரது கணவர் பாபுலால், கார் டிரைவர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிவிபென் வறீயா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 4 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து பணகுடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் டிவிபென் வறீயா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் கேரள மாநிலம், திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் குஜராத் கொண்டு செல்லப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications