அன்புமணியின் மது ஒழிப்புப் போராட்டம்... 1 லட்சம் பேர் பங்கேற்க பாமக மகளிர் உறுதி!
கரூர்: பாமகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் அன்புமணி ராமாதாஸ் விடுத்துள்ள மது ஒழிப்பு போராட்டத்திற்கு பா.ம.க மகளிரணியினர் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என பாமக மகளிர் அணிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கரூர் கோவை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ம.க மகளிரணி கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பா.ம.க கரூர் மாவட்ட பொருளாளர் பாக்கியலெட்சுமி ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் பேசுகையில், நமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே மதுவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறது. நாம் குடியை நிறுத்து, குடிப்பழக்கம் உயிரை கொல்லும் என வலியுறுத்தி பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினால் தமிழக அரசு நாளுக்கு நாள் குடியுங்கள், குடியுங்கள் என டாஸ்மாக் கடைகளை அதிகரித்து வருகிறது. இதனால் தாலிக்கு தங்கம் கொடுக்கும் அ.தி.மு.க அரசே தாலியை அறுக்கிறது. எனவே மதுவினால் மாண்டவர்கள் அதிகமானோர்.

ஆதலால் குடியை நிறுத்தவும், குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நமது கட்சி இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அரசு செவிடன் காதில் ஊதும் சங்கு போல தான் உள்ளது. ஆனால் வரும் 2016 சட்டமன்ற தேர்தலின் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு மதுவிற்கு எதிரான பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார்.

கரூரில் வரும் மே மாதம் நடைபெற உள்ள மதுஒழிப்பு போராட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் அன்புமணி இராமதாசு கலந்து கொண்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். ஆகவே இந்த அறப்போராட்டத்தில் பா.ம.க மகளிரணியினரை சார்ந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து மகளிரணியினரின் பலத்தை நிருபிக்க வேண்டும்.

இந்த அறப்போராட்டத்தை தொடர்ந்து மதுவை ஒழிக்க மகளிரணியினர் திண்ணை பிரச்சாரம் மூலம் ஈடுபட வேண்டும். மகளிரணியினர் தங்களது முழு போராட்டத்தை மதுவுக்கு எதிராக அற வழியில் பாடுபட்டு டாக்டர் ராமதாஸின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ந.மு.விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications