மோடி பிரதமராகணும்.... மொட்டைப் போட்டுக் கொண்ட 10 தேமுதிக தொண்டர்கள்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: மோடி பிரதமராக வேண்டி விழுப்புரம் தொகுதி தேமுதிக தொண்டர்கள் மொட்டை போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்ற லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் உமாசங்கர் வேட்பாளராக களமிறங்கினார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் முத்தையனும், அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரனும், தே.மு.தி.க. சார்பில் உமா சங்கரும் போட்டியிட்டனர். ஆனபோதும், உமா சங்கருக்கும், ராஜேந்தரனுக்கும் இடையே தான் பலத்த போட்டி நிலவியது.
இந்நிலையில், உமா சங்கர் வெற்றி பெற வேண்டியும், நரேந்திர மோடி பிரதமராக வேண்டியும், தே.மு.தி.க. நகர செயலாளர் நரசிம்ம பாபு தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள் 10 பேர் விழுப்புரம், வீரமாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications