நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்
சென்னை: ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12, 13-ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் இந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதுதொடர்பாக டெல்லியில் தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நாடு முழுவதும் இன்று திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
வேலை நிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் கூறியதாவது:- நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது. ஊழியர்கள் பணிக்கு செல்ல மாட்டார்கள். இதனால் வங்கி சேவை பாதிக்கும். பல ஆயிரம் கோடி காசோலைகள் தேக்கமடையும். இந்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications