சேலம் - கோவை வழித் தடத்தில் 10 ரயில்கள் ரத்து

ஈரோடு-கோவை பயணிகள் ரயில், கோவை-ஈரோடு பயணிகள் ரயில், ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில், ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயில், பாலக்காடு-ஈரோடு பயணிகள் ரயில், சேலம்-மேட்டூர் பயணிகள் ரயில், மேட்டூர்-சேலம் பயணிகள் ரயில் ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.
சேலம் - கோவை பயணிகள் ரயில், கோவை - சேலம் பயணிகள் ரயில் சனிக்கிழமை மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தன.
ஈரோட்டு, திருப்பூர், கரூர், கோவை, சேலம் நகரங்களில் உள்ள பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள் பணிக்கு செல்ல, இந்த ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையில், ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்துள்ளது.
அதே போல, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பயணிகள், ரயில் சேவை நிறுத்தம் காரணமாக பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications