‛ஏய் தம்பி.. தம்பி’.. சிறுவன் மீது சரிந்து விழுந்த நடிகர் விஜயின் பிறந்தநாள் பேனர்! கடும் எதிர்ப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர் பலத்த காற்று காரணமாக சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கிய விஜய் நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வரும் 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கிய பிறகு முதல் பிறந்தநாளை கடந்த 22ம் தேதி கொண்டாடினார். இந்த பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
ஆனால் அதற்குள் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 61 பேர் பலியாகி உள்ளனர். இந்த உயிர் பலி காரணமாக நடிகர் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

ஆனாலும் கூட நடிகர் விஜய் மீது கொண்ட பாசத்தால் கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாடினார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. அதேபோல் பல இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டது.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்திலும் நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி வாழ்த்து பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் பிறந்தநாள் முடிந்தும் கூட அந்த பேனர் அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. இத்தகைய சூழலில் தான் அங்கு பலத்த காற்று வீசியது. இந்த வேளையில் பேனர் அருகே உள்ள சாலையில் 10 வயது சிறுவன் நடந்து சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று பேனர் மொத்தமாக சரிந்து நடந்து சென்ற சிறுவன் மீது விழுந்தது. இதனால் சிறுவன் பேனருக்கு அடியில் சிக்கினார். பேனர் சிறுவனை அமுக்கியது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்துவிட்டு ‛‛ஏய்.. தம்பி.. தம்பி.. '' என்று என்று அதிர்ச்சியுடன் ஓடிவந்து சரிந்த பேனரை அகற்றி சிறுவனை மீட்டினர். அதிர்ஷ்டவசமாக சிறுவனுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டது. பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அதேபோல் டூவீலர் ஒன்றும் சேதமானது.
இந்நிலையில் தான் சின்னசேலத்தில் சிறுவன் மீது நடிகர் விஜயின் பிறந்தநாள் வாழ்த்து பேனர் சரிந்து விழும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் பேனர் வைத்த நடிகர் விஜயின் ரசிகர்கள் மற்றும் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
சிக்கும் செந்தில் பாலாஜி? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தோண்டப்படும் டாஸ்மாக் முறைகேடு! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
”ஆபரேசன் அக்னி கலசம்” வன்னியர் ஓட்டுகளை அள்ளுவது எப்படி? விஜய் அமைத்த வியூகம்! பரபரப்பான ’நார்த்’ -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது! -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
கள்ளச்சாராயம் ஒழிக்க தனிப்படை.. கள்ளக்குறிச்சியில் விஜய் அரங்கேற்றும் மாற்றம்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் -
கள்ளச் சாராயத்தை ஒழிக்க விஜய் போட்ட மெகா பிளான்.. நேரடியாக களத்தில் இறங்கிய ஆதவ் அர்ஜுனா! -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications