அதிமுக வேட்பாளர்களில் 149 பேர் புதுமுகங்கள்.... சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் 100 பேருக்கு வாய்ப்பு இல்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர்களில் 149 பேர் புதுமுகங்கள்... தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் 100 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. எஞ்சிய 7 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. அந்த தொகுதிகளில் போட்டியிடுவோரும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளர் பட்டியலின் சிறப்பு அம்சங்கள்:
- அ.தி.மு.க. வேட்பாளர்களில் ஏற்கனவே அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் 50 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 28 பேரும் வேட்பாளர்களாகியுள்ளனர்.
- 100க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை
- வேட்பாளர்களில் 149 பேர் புதுமுகங்கள்.
- ஜெயலலிதா உட்பட 31 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
- கடந்த தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்ட சபாநாயகர் ப.தனபால் இந்த முறை அவினாசி தொகுதியில் இடம்மாறி போட்டியிடுகிறார்.
- நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தற்போது ஆத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- சாத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இம் முறை திருமங்கலம் தொகுதியில் களம் இறங்குகிறார்.
- 2011-ம் ஆண்டு தேர்தலின்போது ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட வெற்றிவேல் இந்த முறை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜே.சி.டி.பிரபாகர் இம் முறை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- கரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.
- கடந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி அதிமுகவில் சேர்ந்த நிலையில் மீண்டும் அவரே வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
- வேட்பாளர்களில் 98 பேர் பட்டதாரிகள், 41 பேர் வழக்கறிஞர்கள்,
- டாக்டர்கள் 6 பேரும், என்ஜினியர்கள் 6 பேரும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications