மழைக்கு பரவும் டெங்கு: சென்னையில் 10 பேருக்கு தீவிர சிகிச்சை
சென்னை: மழை வெள்ளத்தில் சென்னை மாநகரம் ஒருபுறம் மிதந்து கொண்டிருக்க டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட 10 பேர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சாலைகளிலும் தெருக்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் சுத்தமான தண்ணீரில் புழுக்கள் உற்பத்தியாகி, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் ஏஜிப்டி வகை கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

பரவும் மர்மக்காய்ச்சல்
தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மர்மக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக செல்கின்றனர். ஆனால் சுகாதாரத் துறையோ டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் இல்லை என்றே தெரிவித்து வருகிறது.
சென்னையில் 10 பேர் பாதிப்பு
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டவர் 1 கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள 122 மற்றும் 124 வார்டுகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் மறுப்பு
ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினரோ டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தனர். அதேசமயம், 6 பேர் டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
டெங்குவுக்கு தனி வார்டு
தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பின்புறம் மருந்தகம் அருகே மாடியில் டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. தற்போது அந்த வார்டு, தோல் நோய் சம்பந்தப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.
அச்சத்தில் நோயாளிகள்
டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்கு வருபவர்கள், மற்ற நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவ வார்டுகளிலேயே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் அங்கு சிகிச்சை பெறும் மற்ற நோயாளிகள் தங்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவிவிடுமோ என்ற பீதியில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications