எதிர்பார்த்த மார்க் கிடைக்கவில்லையே... விரக்தியில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரியலூர்: இன்று காலை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தேர்தல் முடிவில் தான் எதிர்பார்த்த மார்க் கிடைக்கவிலையென விரக்தியில் மாணவி ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 94.4% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர் . வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10th Girl student commits suicide at Ariyalur

10 லட்சம் மாணவ, மாணவியருக்கு உடனடியாக அவர்களின் செல்போனுக்கு முடிவு அனுப்பி வைக்கப்பட்டன. முதன்முறையாக ரேங்க் முறையில்லாமல் கிரேடு முறையில் ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு 92.5 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.2 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். 481 மதிப்பெண்களுக்கு மேல் 38611 பேர் பெற்றுள்ளனர். 450 முதல் 480 வரை 1,22,757 பேர் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள நாவலூர் காலனியைச் சேர்ந்த மாணவி கலைவாணி தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையென தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
10th Girl student commits suicide at Ariyalur district Navalur Colony Village.Tragedy has happenend at Ariyalur district.
Please Wait while comments are loading...