சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை!
சென்னை: சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்று போலீஸார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று தீவிர சோதனை நடத்தினர். இது வழக்கமான சோதனை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இன்று போலீஸார் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் திடீரென தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயில்களிலும், பிளாட்பாரங்களில் உள்ள பார்சல்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ரயிலில் பிராயணப்பட வந்திருந்த பயணிகளின் உடமைகள், சூட்கேஸ், பார்சல் போன்றவற்றையும் போலீஸார் சோதனையிட்டனர்.

மேலும் ரயில் நிலையத்திற்குள் வந்தவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. ரயில் நிலையப் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்டிரல் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் ஏதும் வந்துள்ளதா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை. இது வழக்கமான சோதனைதான் என்று மட்டு்ம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications