நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட் உள்ளிட்ட 11 கட்டிடங்களுக்கு சீல்!
நீலகிரியில் 11 காட்டேஜ்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
மசினகுடி: நீலகிரியில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மேலும் 11 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான ரிசார்ட்டும் ஒன்றாகும்.
ஊட்டி அருகே மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாடக்கூடிய பகுதிகள். இங்குள்ள பட்டா நிலங்களில் வீடுகள் கட்ட அனுமதி பெற்றுவிட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

உச்சநீதிமன்றம் வழக்கு
அந்த கட்டிடங்கள் பெரும்பாலும் ரிசார்ட்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனால் யானைகள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டு அவற்றின் இனப்பெருக்கத்திற்கும் பாதிப்பு ஏற்படுவதாக சென்னை ஐகோர்ட்டிலும் பின்னர் மேல்முறையீடாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது.

12 விடுதிகளின் ஆவணங்கள்
இதனை விசாரித்த நீதிபதிகள் 39 விடுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்ட 27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் சீல் வைக்க வேண்டும் என்றும், மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரிபார்த்து அனுமதி இல்லையெனில் சீல் வைக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு உத்தரவிட்டார்.

அவகாசம் கோரினர்
அதன்படி முதற்கட்டமாக 27 தனியார் விடுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி சீல் வைக்கப்பட்டது. மீதமுள்ள 12 தனியார் விடுதிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது அந்த விடுதி உரிமையாளர்கள் எப்படியாவது தங்களதுஉரிய ஆவணங்களை தாக்கல் செய்கிறோம், அதனால் கால அவகாசம் கோரினர்.

மிதுன் சக்கரவர்த்தி
அதன்படி ஆகஸ்ட் 25-ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அதனால் 12 கட்டிடங்களில் ஒன்று வீடு என்பதால் அதை தவிர மற்ற 11 காட்டேஜ்களுக்கும் இன்று சீல் வைக்கப்பட்டது. அதில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான மொனார்க் சப்பாரி பார்க் ரிசார்ட்டும் ஒன்று.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications