11 மாதங்களில் 11 ஆதரவற்ற பச்சிளம் குழந்தைகள் மீட்பு - அதிர்ச்சி தரும் கோவை!
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த 11 மாதத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 11 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், காளப்பட்டியிலிருந்து சரவணம்பட்டிக்கு செல்லும் வழியில் இருந்த காலி இடத்தில் ஆதரவற்ற நிலையில் கிடத்தபட்டிருந்த பெண் குழந்தை ஒன்று இருந்ததை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தைகள் பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அலுவலர்கள் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறந்த சில மணி நேரமே ஆன நிலையில் அக்குழந்தையை அதன் தாய் விட்டுச்சென்றது தெரியவந்தது.
சிகிச்சைக்குப்பின், குழந்தை நல்ல நிலையில் இருந்ததை தொடர்ந்து, குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விஜயா முன்னிலையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் சௌந்தரவேல் அந்தக் குழந்தையை கிணத்துக்கடவு குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை, கோவை மாநகரப்பகுதியில் 5 ஆண் குழந்தையும், 6 பெண் குழந்தையும் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்டு தனியார் காப்பகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications