பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கொட்டும் புகார்கள் – மேலும் 11 வழக்குகள் பதிவு
மதுரை: கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக சகாயம் குழு பரிந்துரைத்த புகார்களின் அடிப்படையில் பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது மேலும் 11 வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்படி திருவாதவூர் மற்றும் கீழையூர் பகுதிகளில் நிலங்களை மோசடியாகப் பதிவு செய்தது மற்றும் வாங்கிய நிலத்துக்குப் பணம் தராமல் மோசடி செய்தது உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது கீழவளவு மற்றும் ஒத்தக்கடை காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒத்தக்கடையை அடுத்த புதுதாமரைப்பட்டி ஜான்கிட் நகரில் காவலர் குடியிருப்புகள் மற்றும் குண்டாங்கல் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகளை மிரட்டி வாங்கியது, ஆக்கிரமிப்பு செய்தது என பி.ஆர்.பி கிரானைட் நிறுவனம் மீது ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சகாயம் குழு பரிந்துரைத்த புகார்களின் அடிப்படையில் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக மேலூர் காவல் நிலையத்தில் 41 வழக்குகள், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் 30 வழக்குகள் என இதுவரை மொத்தம் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications