எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து மேலும் 11 கைதிகள் விடுதலை!
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புழல் சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் 10 ஆண்டுகள் தண்டனை காலத்தை நிறைவு செய்த கைதிகளை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிக அரசு விடுவித்து வருகிறது.

அரசியலமைப்பு சட்ட பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் அரசாணைகள் மூலம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவான 166 கைதிகள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் புழல் சிறையில் இருந்து இன்று மேலும் 11 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications