காமராஜரை நேர்ல பாத்திருப்பீங்க, போட்டோல பார்த்திருப்பீங்க.. கொழுக்கட்டைலை பார்த்திருக்கீங்களா?
சென்னை: முன்னாள் முதல்வர் காமராஜரின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு, நாளை அவரது உருவத்தில் 114 கிலோவில் முழுக் கொழுக்கட்டையை தயார் செய்து அசத்த இருக்கிறாராம் சமையல் கலை வல்லுநரான இனியவன்.

தமிழக முதல்வர்களில் ஒருவராக பதவி வகித்தவர் காமராஜர். இன்றும் அவரது ஆட்சிக்காலம் பொற்காலமாக வர்ணிக்கப்படுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதே அதற்குக் காரணம் ஆகும்.
இந்நிலையில் மறைந்த முதல்வர் காமராஜரின் 114வது பிறந்ததினம் நாளைக் கொண்டாடப்பட இருக்கிறது. எனவே, அவரது பிறந்தநாளை உலகமே கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய முயற்சி ஒன்றை செய்ய இருக்கிறார் சமையல் கலை வல்லுநரான இனியவன்.
அதாவது நாளை 114 கிலோ எடையில் காமராஜரின் முழு உருவத்தையும் இனிப்பு கொழுக்கட்டையாக தயார் செய்து வருகிறார் இவர். இதனை நாளை காமராஜர் வாழ்ந்த வீட்டில் மக்கள் பார்வைக்காக வைக்கிறார். பின்னர் அதனை மக்களுக்கு வெட்டி சாப்பிடக் கொடுக்க இருப்பதாக இனியவன் தெரிவித்துள்ளார்.
பின்னர் மீதமுள்ள கொழுக்கட்டையை சென்னை மெரினா கடலில் கரைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட இனியவன் ஏற்கனவே 100 கிலோ எடையிலான இட்லி, அப்துல் கலாம் உருவத்தில் இட்லி, அன்னை தெரசா உருவத்தில் இட்லி என இட்லியை வைத்தே ஏராளமான கண்காட்சிகளை நடத்தியவர். இவரது சாதனைகள் லிம்கா புத்தகத்திலும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications