வேட்பாளர்களின் செலவுகளை கண்காணிக்க.. தேர்தல் பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகை
சென்னை: அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க 12 பார்வையாளர்கள் இன்று தமிழகம் வருகின்றனர். இவர்கள் சென்னை, கோவை, மதுரை ஆகிய மண்டல வாரியாகச் சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது.

இதுகுறித்து சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் முடிவடையும் மே 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் செல்போன் மூலமாக மொத்தமாக குறுஞ்செய்திகளை அனுப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் மூலமும் பிரசாரங்கள் செய்யக் கூடாது.
அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பிரசாரத்துக்காக செய்யும் செலவுகளைக் கண்காணிக்க வெளி மாநிலங்களில் இருந்து 12 செலவினப் பார்வையாளர்கள் வருகின்றனர். அதில், 9 பேர் இந்திய வருவாய்ப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 2 பேர் ஐ.ஏ.எஸ்., ஒருவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாவார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22ஆம் தேதியன்று தொடங்குகிறது. இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டவுடன், அரசின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும்.
வேட்புமனுவில் தவறான தகவல் அளிப்போருக்கு சிறை தண்டனை: வேட்புமனு தாக்கலின் போது சரியான தகவல்களை மட்டுமே அளிக்க வேண்டும். இந்தத் தகவல்கள் உடனுக்குடன் சரிபார்க்கப்படும். தவறான தகவல்களை அளித்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.
கூடுதலாக 380 வாக்குச் சாவடிகள் அமைப்பு: தமிழகத்தில் 65,616 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. கூடுதலாக 380 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதா என்பது குறித்து ஏப்ரல் 22ஆம் தேதி தெரியவரும்.
வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அந்த ஏஜெண்டுகள் வாக்குப்பதிவு தினத்தன்று மதியம் 3 மணிக்கு பிறகு வாக்குச்சாவடியை விட்டு வெளியேறவோ அல்லது அவருக்கு பதில் வேறு ஒருவரை மாற்றி விட்டு செல்வதற்கோ தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications