ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை, சேலம், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 12 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
திருவாரூர் எஸ்.பி.,யாக மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,யாக ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை எஸ்.பி.,யாக லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,யாக ஜியா உல் ஹக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை போக்குவரத்து துணை ஆணையராக எஸ். சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக சசி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தெற்கு பிராந்திய ஊழல் தடுப்பு காவல் கண்காணிப்பாளராக சரோஜ் குமார் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சட்டம் ஒழுங்கு துணை ஐ.ஜி.,யாக திருநாவுக்கரசு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு சிறப்பு படை காவல் கண்காணிப்பாளராக சிபி சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சீரூடை பணியாளர் தேர்வாணைய காவல் கண்காணிப்பாளராக பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பெருநகர தெற்கு துணை ஆணையராக அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications