மதுரை கோட்டத்தில் 12 பாசஞ்சர் ரயில்கள் வாரம் ஒரு நாள் ஓடாது... பராமரிப்புக்காக!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை கோட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் 12 பாசஞ்சர் ரயில்கள் வாரம் ஒருமுறை, பராமரிப்புப் பணிக்காக ரத்து செய்வதாக இந்திய ரயில்வேயின் மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் ரயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக ரயில் பாதை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் வருகிற டிச.26ம் தேதி வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சில பயணிகள் ரயில் சேவை வாரம் ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் வருமாறு:

ஞாயிறு ரத்தாகும் ரயில்கள்

ஞாயிறு ரத்தாகும் ரயில்கள்

ஞாயிற்றுக்கிழமை தோறும் ரத்து செய்யப்படும் ரயில்கள்:

1) திண்டுக்கல்-பழனி (வண்டி எண்.56774) பயணிகள் ரயில்.
2) பழனி-திண்டுக்கல் (எண்.56773) பயணிகள் ரயில்.
3) திருச்சி-மானாமதுரை (எண்.76807) பயணிகள் ரயில்.
4) மானாமதுரை-திருச்சி (எண்.76808) பயணிகள் ரயில்.

செங்கோட்டை- நெல்லை பாசஞ்சர்

செங்கோட்டை- நெல்லை பாசஞ்சர்

5) செங்கோட்டை-நெல்லை (எண்.56798) பயணிகள் ரயில்.
6) நெல்லை-செங்கோட்டை (எண். 56799) பயணிகள் ரயில்.
7) நெல்லை-தூத்துக்குடி (எண்.56828) பயணிகள் ரயில்.
8) தூத்துக்குடி-நெல்லை (எண்.56827) பயணிகள் ரயில்.

காரைக்குடி - திருச்சி

காரைக்குடி - திருச்சி

9) காரைக்குடி-திருச்சி (எண்.76830) பயணிகள் ரயில் டெமு.
10) நெல்லை-செங்கோட்டை (எண்.56803) பயணிகள் ரயில்.
11) செங்கோட்டை-நெல்லை (எண்.56802) பயணிகள் ரயில்.
12) திருச்சி-காரைக்குடி பயணிகள் ரயில் (எண்.76831)

அக்டோபர் 21ம் தேதி வரை

அக்டோபர் 21ம் தேதி வரை

மதுரை-திண்டுக்கல் இடையே செப்.22ம் தேதி முதல் அக்.21ம் தேதி (ஞாயிறு தவிர) வரை ஒரு மாதம் ரயில் பாதை பராமரிப்பு பணி நடக்கிறது.

பழனி ரயில் தாமதம்

பழனி ரயில் தாமதம்

இதனால் திருச்செந்தூர்-பழனி பயணிகள் ரயில் (வண்டி எண்.56770) 50 நிமிடம் தாமதமாக 8.15 மணிக்கு செல்லும்.
நெல்லை-திருச்சி இன்டர்சிட்டி ரயில் (எண்.22628) சமயநல்லூர் திண்டுக்கல் இடையே 17 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+