ஸ்டான்லி மருத்துவமனையில்எறும்பு கடித்து 12 வயது சிறுவன் பலி: உறவினர்கள் போராட்டம்!
சென்னை: எறும்பு கடித்ததாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கொடுங்கையூரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அமுலு. நடைபாதையில் வசித்து வரும் இத்தம்பதியினர், தங்களது 12 வயது மகன் சுதாகரை ராயபுரம் தனியார் இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்து வந்தனர்.
5-ம் வகுப்பு படித்து வந்த சுதாகர் கடந்த 10-ம் தேதி காலையில் குளித்துவிட்டு துண்டால் முகத்தை துடைத்து இருக்கிறார். அப்போது டவலில் இருந்த கட்டெறும்பு சிறுவனின் கன்னம் மற்றும் கண்களில் கடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சுதாகரின் உடலில் தடிப்புகள் ஏற்பட்டது.
உடனடியாக இல்ல நிர்வாகிகள் சுதாகரை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த உறவினர்கள், ‘எறும்பு கடித்தால் யாராவது உயிரிழப்பார்களா?' எனக் கூறி சிறுவனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சிறுவனின் உடலை வாங்கிச் சென்றனர்.
சிறுவனின் மரணம் தொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், "எறும்பு கடித்ததாகத்தான் சிறுவன் அனுமதிக்கப்பட்டான் ஆனால் சிறுவனின் உடலில் பல இடங்கள் வீங்கிவிட்டன. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளித்தோம். ஆனால் சிகிச்சை பல னின்றி இறந்துவிட்டார். எறும்பு கடித்ததா அல்லது வேறு ஏதாவது பூச்சி கடித்ததா என்பதை அறிய சிறுவனின் உடலில் இருந்து தோல் மற்றும் சதைகளை பரிசோத னைக்கு அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவு வந்தால்தான் எதுவும் சொல்ல முடியும்" என்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications