தேர்தலைப் புறக்கணிப்போம்... 13 கிராம மக்களின் எச்சரிக்கையில் பதட்டத்தில் அதிகாரிகள்!
நெல்லை: நெல்லை அருகே கால்வாயை சீரமைக்காவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால அதிகாரிகள் பதட்டமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தென்மலை பகுதியில் தென்மலை, சுப்பிரமணியபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம், புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதை சுற்றி பல்வேறு 13 கிராமபபுறங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள 13 குளங்களுக்கும் உள்ளாறுக்கு குறுக்கே மேற்கு தொடர்ச்சி மலை ஆற்றுபடுகையில் உள்ள கால்வாய் வழியாக ஓவ்வொரு குளமாக வெள்ள நீர் மறுகால் பாய்ந்து நிரம்புவது வழக்கம்.

30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் வெள்ள நீர் பிரிய கூடிய முறியபஞ்சான் மதகு அடையாளம் தெரியாமல் உருகுலைந்து போய் விட்டது. இதனால் 13 குளங்களுக்கும் நீர்வரத்து இல்லாமல் வறண்டு போய் விட்டது. இந்த மதகை சீரமைக்க வலியுறுத்தி 13 கிராம மக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தி பார்த்தனர். ஓன்றும் ஆகவில்லை.
இதையடுத்து நேற்று மாலை தென்மலை பஸ் நிறுத்தம் முன்பு கூடிய 13 கிராம மக்கள் வரும் 16ம் தேதி நடைபெறும் சட்டசபைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். மேலும் அவர்களது வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றினர். இதுகுறித்து தகவல் அறி்ந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்கள் போராட்டம் குறித்து விசாரணை நடத்தினர்.
அந்த வழியாக ரோந்து வந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி ஜெமீமா ஜீப்பையும் கிராம மக்கள் வழிமறித்து போராட்டம் நடத்தினர். அவர்களது கோரிக்கை மனுவை பெற்று கொண்ட அவர் இதுகுறித்து கலெக்டருக்கு தெரிவிப்பதாக கூறி புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications