திருமா.வைப் போலவே... மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்த 13 வேட்பாளர்கள்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 14 வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. திமுக கூட்டணி 98 தொகுதிகளைக் கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தங்களது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
அவர்களின் முக்கியமானவர் ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு. இவர் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்,
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிட்டார். இங்கு 87 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தனது வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
இதேபோல், மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக் கனியை தவறவிட்ட மற்ற வேட்பாளர்களின் விபரமாவது:-
திண்டிவனம் - ராஜேந்திரன் ( அ.தி.மு.க) - 101 வாக்குகள்
செய்யூர் (தனி) - முனுசாமி ( அ.தி.மு.க ) - 304 வாக்குகள்
கோவில்பட்டி - சுப்பிரமணியன் (தி.மு.க) - 428 வாக்குகள்
கரூர் - சுப்பிரமணியன் (காங்கிரஸ் ) - 441 வாக்குகள்
ஒட்டப்பிடாரம் - கிருஷ்ணசாமி ( தி.மு.க. கூட்டணி - புதிய தமிழகம்) - 493 வாக்குகள்
பெரம்பூர் - என்.ஆர்.தனபாலன் (தி.மு.க. கூட்டணி - பெருந்தலைவர் மக்கள் கட்சி ) - 519 வாக்குகள்
திருவிடைமருதூர் (தனி) - சேட்டு (அ.தி.மு.க.) - 532 வாக்குகள்
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க. ) - 601 வாக்குகள்
திருமயம் - வைரமுத்து ( அ.தி.மு.க. ) - 766 வாக்குகள்
பரமத்தி வேலூர் - ராஜேந்திரன் ( அ.தி.மு.க. ) - 818 வாக்குகள்
திருப்போரூர் - விஸ்வநாதன் ( தி.மு.க. ) - 950 வாக்குகள்
பர்கூர் - கோவிந்தராஜன் ( தி.மு.க ) - 982 வாக்குகள்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications