கன்னியாகுமரி அருகே கைதான இலங்கை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்
ராமநாதபுரம்: அனுமதியை மீறி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 14 பேருக்கு ஜூன் 4ம்தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழகத்தின் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை நாட்டு மீனவர்கள் சிலர் இரு படகுகளில் கன்னியாகுமரி அருகேயுள்ள கடல் பகுதியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை வீரர்கள், அந்த படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது இரு படகுகளிலும் தலா 400 கிலோ அளவுக்கு மீன்கள் இருப்பது தெரியவந்தது. விதிமுறைகளை மீறியதற்காக இரு படகுகளிலுமிருந்த 14 இலங்கை மீனவர்களை கைது செய்த கடற்படையினர், அடுத்த கட்ட விசாரணைக்காக, அவர்களை தூத்துக்குடியிலுள்ள தமிழக கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பரமகுடியில் உள்ள ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 4ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் இலங்கையின் நீரோழும்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்ததாக, இந்தாண்டில் இதுவரை 64 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications