17 வயது கிளீனருடன் எஸ்கேப் ஆன 9ம் வகுப்பு மாணவி
குலசேகரம்: குலசேகரத்தில் காதல் என்ற பெயரால் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், 17 வயதான மைனர் பையனுடன் ஓடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குலசேகரம், அன்பு நகரைச் சேர்ந்த அந்த பையன் 17 வயதானவர். அவர் அப்பகுதியில் வேன் கிளீனராக வேலை பார்த்து வருகின்றார்.
அப்பகுதியிலேயே அமைந்துள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருடன் நெருங்கிப் பழகிய கிளீனருக்கு, நாளடைவில் அப்பழக்கம் காதலாக மாறியது.
இப்பழக்கத்தால் அம்மாணவியையும், அவருடைய தோழிகள் சிலரையும் கூட்டிக் கொண்டு சுற்றுலா என்ற பேரில் கன்னியாகுமரி சென்றுள்ளார் அவர்.
இத்தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்று குலசேகரம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து அப்பையன் போலீசாரால் அழைத்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். இருவரும் மைனர் என்பதால் வெறும் எச்சரிக்கையுடன் விட்டுவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற அம்மாணவி வீட்டிற்கு திரும்பவே இல்லை. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடிக் களைத்துப் போய் போலீசில் மீண்டும் புகார் அளித்தபோதுதான் அவர் கிளீனருடன் ஓடியது தெரியவந்துள்ளது.
உடனடியாக அந்தப் பையனின் வீட்டிற்குச் சென்ற போலீசார் அங்கிருந்த ஜோடியை மடக்கிப் பிடித்தனர். அப்போது அம்மாணவி நான் காதலனுடன் தான் செல்வேன் என்று அடம்பிடித்துள்ளார்.
இதனால் போலீசார் அம்மாணவிக்கு அறிவுரை கூறி அனுப்பியதுடன், கிளீனரையும் அவருக்கு தொல்லை கொடுக்க கூடாது என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குலசேகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications