தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்! 4 நாட்களுக்கு உச்சபட்ச கெடுபிடி!
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 308-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் ஏராளமானோர் வருகை தர உள்ளனர்.

பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிகளின் போது பல்வேறு அமைப்பினர் கூடும் நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி அதிகமானோர் கூடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தவிர்ப்பதற்காக தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்துக்குள் வாள், கத்தி, கட்டைகள், கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவையும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications