உடுமலைப்பைட்டை தலித் இளைஞர் படுகொலை... கைதான 5 பேருக்கு 15 நாள் சிறை
உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேருக்கும் 15நாள் சிறைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உடுமலைப்பேட்டையில் காதல் மணம் புரிந்த தலித் வகுப்பைச் சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி கவுசல்யாவை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் சங்கர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த ஜாதிவெறிக் கொலைச் சம்பவம் நாட்டையே பதற வைத்து விட்டது. இந்த கொலை தொடர்பாக அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாகவும், பெயர் விவரங்களை இப்போது வெளியிட இயலாது என்றும் திருப்பூர் எஸ்பி கூறியுள்ளார்.
இந்த நிலையில் கைதான 5 பேரை உடுமலைப்பேட்டை நீதிபதி ஸ்ரீவித்யா வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர் ஐந்து பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்னொரு நபருக்கு வலை வீச்சு
இந்தக் கொலை வழக்கில் தன்ராஜ் என்ற நபருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் போலீஸார் அவரைத் தேடி வருகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரில் ஒருவர், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏற்கனவே கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி போலீஸில் சரணடைந்து தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications