15 திமுக எம்எல்ஏக்கள் எங்க பக்கம் தவ்வப் போறாங்க.. திருவொற்றியூர் கூட்டத்தில் அள்ளி விட்ட தினகரன்!
திமுக எம்எல்ஏக்கள் 15 பேர் அதிமுகவில் இணைய உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக எம்எல்ஏக்கள் 15பேர் அதிமுகவில் இணைய உள்ளதாக அள்ளிவிட்டுள்ளார் டிடிவி தினகரன். ஆர்கே.நகர் தொகுதி தேர்தலுக்கு பின் ஓபிஎஸ் அணி காணாமல் போய்விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவில் நியமிக்கப்பட்ட டிடிவி.தினகரன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது என்றார். திமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் தங்களது தலைமையிலான அதிமுகவில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணி காணாமல் போய்விடும் என்று தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஒன்றாக வந்தாலும் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது என்றும் தினகரன் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறந்த நடிகராக விளங்குகிறார். அவர் அதிமுகவை அழிக்க நினைப்பது வருத்தம் அளிக்கிறது என்றம் டிடிவி.தினகரன் கூறினார்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications