ஈரான் சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை: இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை
ஈரான் நாட்டு கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை: ஈரான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்களை உடனடியாக இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினரகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜார்ஜ், கிருபா, வர்கேஷ் வர்மா, ஸ்ரீஜித், ஸ்ரீன்னு உள்பட 15 மீனவர்கள் 15 மீனவர்கள், கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி பக்ரைன் நாட்டிலிருந்து விசைப்படகு ஒன்றில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

அப்போது, கடல் எல்லையை தாண்டியதாக கூறி ஈரான் நாட்டு கடற்படையினர் அவர்களை கைது செய்து படகிலேயே சிறை வைத்தனர். இதுதொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவர்களை விடுதலை செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் அபராதத்தை செலுத்திய போதிலும், இதுவரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தமிழக மீனவர்களை மீட்க வேண்டுமென கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதனை அடுத்து வெளியுறவு துறை அதிகாரிகள் தமிழக மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 15 தமிழக மீனவர்களை ஈரான் அரசு விடுதலை செய்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை செய்யபட்ட மீனவர்களை உடனடியாக தாயகம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்களது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications