தேமுதிக- மநகூ வேட்பாளர்களால் பாமகவிற்கு கடும் சவால்- ஜூவி கருத்துக்கணிப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பெரும்பாலான தொகுதிகளில் 10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவு உள்ளதாக ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதே நேரத்தில் 234 தொகுதிகளில் 26 தொகுதிகளில் 15 சதவிகித்திற்கும் மேற்பட்ட மக்களின் ஆதரவு உள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. வடமாவட்டங்களில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடும் சவாலை அளித்து வருகின்றனர்.
அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மாற்று அணி என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளது தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது என்றாலும் ஒரு தொகுதியில் கூட இந்த கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க மாட்டார்கள் என்றே ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு சொல்கிறது.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை நடைபெற உள்ள நிலையில் இன்று வெளியாகியுள்ள ஜூனியர் விகடன் இதழ், யாருக்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பது பற்றியும், தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியின் நிலை பற்றியும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

தேமுதிகவிற்கு மக்கள் நலக்கூட்டணி சில தொகுதிகளில் 5 சதவிகித ஆதரவு கூட கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு சில தொகுதிகளில் 15 சதவிகிதம், சில தொகுதிகளில் 20 சதவிகித வாக்காளர்களின் ஆதரவுடன் அதிமுக, திமுகவிற்கு கடும் போட்டியை கொடுத்துள்ளது.
தேமுதிக - மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவு அதிகமுள்ள தொகுதிகள்:
நீலகிரி மாவட்டம் பவானிசாகர் (தனி) - இ.கம்யூனிஸ்ட் கட்சி 20%
தளி தொகுதி - இ. கம்யூனிஸ்ட் கட்சி 24%
ஆவடி - மதிமுக 19%
கிள்ளியூர் - தமாகா 15%
விளவங்கோடு - மா. கம்யூனிஸ்ட் 18%
தூத்துக்குடி - தேமுதிக 17%
ஒட்டப்பிடாரம் ( தனி) - தேமுதிக 12%
கோவில்பட்டி - மதிமுக 16%
ஸ்ரீவைகுண்டம் - தமாகா 17%
திருப்பூர் வடக்கு - இ.கம்யூனிஸ்ட் 15%
ஆற்காடு - மதிமுக 17%
மேலூர் -தமாகா 15%
அரியலூர் - தேமுதிக 15%
ஜெயங்கொண்டம் - மதிமுக 20%
புவனகிரி - விசிக 17%
சிதம்பரம் (தனி) இ.கம்யூனிஸ்ட் 26%
காட்டுமன்னார்கோவில் (தனி) - 30%
ராமநாதபுரம் - தேமுதிக 21%
சங்கரன்கோவில் (தனி) - மதிமுக - 20%
பழநி - மா.கம்யூனிஸ்ட் 15%
ஏற்காடு ( தனி) 15%
திட்டக்குடி (தனி) - தேமுதிக 18%
விருதாச்சலம் - தேமுதிக 20%
பண்ருட்டி - தேமுதிக 21%
உளுந்தூர்பேட்டை - தேமுதிக 23%
வானூர் (தனி) - விசிக 16%
50 தொகுதிகளுக்கும் மேல் 10 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்களின் ஆதரவு உள்ளது. 30 தொகுதிகளுக்கும் மேல் 14 சதவிகித வாக்காளர்களின் ஆதரவு மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக வேட்பாளர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. பாமகவின் ஆதரவு அலை வீசும் வட மாவட்டங்களில் தேமுதிகவிற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications