8 வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயில்களில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது
வாழப்பாடி அருகே 8 வழிச்சாலையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த 15 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

வாழப்பாடி: சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வாழப்பாடி அருகே உண்ணாவிரதம் இருந்த 15 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், வாழப்பாடி அருகே குள்ளம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 15 பேர் பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் 8 வழிச்சாலையை எதிர்த்து நேற்று உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தால் தங்களுடைய விளை நிலங்கள் பறிபோவதாக புகார் தெரிவித்தனர்.
குள்ளம்பட்டியில் 8 வழிச்சாலையை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது என்பது குறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்தனர். கைதான 9 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications