16 ஆடுகள் கத்திக் குத்தால் சாவு: பொதுமக்கள் போராட்டம்
நெல்லை: நெல்லை அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 16 ஆடுகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளன. இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியபுரம் சீதாராமன்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அவர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை பட்டி போட்டு வளர்த்து வருகிறார். அவரிடம் 70 செம்மறி ஆடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் பொன்னுசாமியின் பட்டியில் இருந்த இரும்புக் கூண்டு காணாமல் போனது.

இது குறித்து அவர் அதே ஊரைச் சேர்நத முருகன் என்பவர் மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முருகனிடம் விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் பொன்னுசாமி வீட்டுக்கு வந்து என் மீது எப்படி புகார் செய்யலாம் என்று கேட்டதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில் அதிகாலையில் பொன்னுசாமி ஆடுகளுக்கு புல் வைக்க சென்றார். அப்போது பட்டியின் மேல்புறத்தில் 5 ஆடுகள் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
சிறிது தூரம் சென்று பார்த்தபோது மேலும் 11 ஆடுகள் கத்தியால் குத்தப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பொன்னுசாமியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை. சாலை மறியலால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications